For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெறும் ஒரு போட்டியில் ஆடிய இளம் இந்திய வீரருக்கு கிடைத்த மரியாதை.. நெகிழ வைத்த சம்பவம்!

ராஜ்கோட் : இந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அந்தப் போட்டி ரோஹித் சர்மாவின் நூறாவது சர்வதேச டி20 போட்டி ஆகும். அதை குறிக்கும் வகையில் போட்டிக்கு முன் இளம் வீரர் ஒருவர் அவருக்கு நூறாவது போட்டிக்கான தொப்பியை வழங்கி இருக்கிறார்.

இளம் வீரருக்கு மரியாதை

இளம் வீரருக்கு மரியாதை

பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் ஓய்வு பெற்ற மூத்த வீரர் அல்லது அணியில் ஆடும் மூத்த வீரர் குறிப்பிட்ட வீரருக்கு மரியாதை செய்வார். ஆனால், வங்கதேச தொடரில் அறிமுகம் ஆன இளம் வீரருக்கு அந்த மரியாதையை அளித்துள்ளது இந்திய அணி.

டி20 மன்னன்

டி20 மன்னன்

ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். அதிக ரன்கள், அதிக சிக்ஸர் என ஏராளமான சாதனைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். டி20 போட்டிகளில் மன்னன் என கூறும் அளவுக்கு சாதனைகள் செய்துள்ளார்.

நூறு போட்டி சாதனை

நூறு போட்டி சாதனை

இந்த நிலையில், உலக அளவில் நூறு சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் சர்மா. ஷோயப் மாலிக் 111 டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து ரோஹித் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

முதல் இடம்

முதல் இடம்

இந்திய அளவில் ஆடவர் கிரிக்கெட்டில் அதிக டி20 போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்தார். ரோஹித்துக்கு அடுத்த இடத்தில் தோனி இருக்கிறார். தோனி 98 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.

தொப்பியை அளித்த இளம் வீரர்

இந்த சிறப்பான தருணத்தில் இளம் வீரர் சிவம் துபே ரோஹித் சர்மாவுக்கு அவரது நூறாவது போட்டியில் அணிய வேண்டிய தொப்பியை வழங்கினார். அந்த புகைப்படத்தை ரோஹித் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிவம் துபே அறிமுகம்

சிவம் துபே அறிமுகம்

மும்பை வீரரான சிவம் துபே வங்கதேச டி20 தொடரின் முதல் போட்டியில் தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். வெறும் ஒரு போட்டியில் மட்டுமே ஆடிய அவர், தன் இரண்டாவது போட்டிக்கு முன் ரோஹித் சர்மாவுக்கு நூறாவது போட்டிக்கான தொப்பியை வழங்கினார்.

நெகிழ வைக்கும் தருணம்

நெகிழ வைக்கும் தருணம்

இந்திய அணியில் இளம் வீரர்களை கௌரவித்து வரும் நடைமுறை சில காலமாக நடந்து வருகிறது. தொடர் வெற்றிக்கு பின் கோப்பையை அணியின் இளம் வீரரிடம் அளிப்பது உள்ளிட்டவை அந்த அடிப்படையிலேயே நடந்து வருகிறது.

ரோஹித் அதிரடி

ரோஹித் அதிரடி

தன் நூறாவது போட்டியில் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார். வங்கதேசம் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 153 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 தொடரை 1 - 1 என சமன் செய்தது இந்தியா. மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 9, 2019, 17:32 [IST]
Other articles published on Nov 9, 2019
English summary
IND vs BAN : A young player handed the 100th match cap tio Rohit Sharma. Rohit shared the moment in his twitter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X