For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்!

Recommended Video

Ashwin breaks Harbhajan and kumble records | ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி அஸ்வின் சாதனை

இந்தூர் : சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.

டெஸ்ட் அரங்கில் சொந்த மண்ணில் 250 விக்கெட்களை வீழ்த்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்.

மேலும், முத்தையா முரளிதரனுடன் ஒரு சாதனைப் பட்டியலில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - வங்கதேசம் மோதிய முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அஸ்வின் சொந்த மண்ணில் 249 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 250 டெஸ்ட் விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்ற நிலை இருந்தது.

மைல்கல்லை எட்டினார்

மைல்கல்லை எட்டினார்

முதல் டெஸ்டில் வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் விக்கெட்டை வீழ்த்திய போது அஸ்வின் இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

251 டெஸ்ட் விக்கெட்கள்

251 டெஸ்ட் விக்கெட்கள்

மேலும், முதல் நாள் ஆட்டத்தில் மக்மதுல்லா விக்கெட்டையும் வீழ்த்தி, வங்கதேச அணியின் முதல் இன்னிங்க்ஸில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். தற்போது சொந்த மண்ணில் 251 டெஸ்ட் விக்கெட்களை வைத்துள்ள அஸ்வின் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடம்

மூன்றாம் இடம்

இந்திய அளவில் சொந்த மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவதாக இணைந்துள்ளார் அஸ்வின். இந்திய மண்ணில் அனில் கும்ப்ளே - 350 விக்கெட்கள், ஹர்பஜன் சிங் - 265 விக்கெட்கள், அஸ்வின் - 251 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர்.

உலக அளவில் முதல் இடம்

உலக அளவில் முதல் இடம்

அதே சமயம், சொந்த மண்ணில் விரைவாக 250 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அளவிலும், உலக அளவிலும் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் அஸ்வின்.

கும்ப்ளே, ஹர்பஜன்

கும்ப்ளே, ஹர்பஜன்

அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரை இந்திய அளவில் வீழ்த்தி இருக்கும் அஸ்வின் 42 போட்டிகளில் 250 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அனில் கும்ப்ளே 43 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 51 போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர்.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

உலக அளவில் முத்தையா முரளிதரனுடன் இதே பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் அஸ்வின். இவர்கள் இருவரும் 42 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர்.

அடுத்த இடங்கள்

அடுத்த இடங்கள்

இந்தப் பட்டியலில் அடுத்த இடங்களில் - அனில் கும்ப்ளே - 43 போட்டிகள், ரங்கனா ஹெராத் - 44 போட்டிகள், டேல் ஸ்டெய்ன் - 49 போட்டிகள், ஹர்பஜன் சிங் - 51 போட்டிகள், உள்ளனர்.

Story first published: Thursday, November 14, 2019, 20:33 [IST]
Other articles published on Nov 14, 2019
English summary
IND vs BAN : Ashwin breaks Harbhajan Singh and Anil Kumble record. He also jointly become fastest bolwer to take 250 test wickets in home.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X