For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 டக் அவுட்.. அனல் பறந்த பவுலிங்.. 30.3 ஓவரில் வங்கதேசத்தை ஊதித் தள்ளிய மூவர் கூட்டணி!

Recommended Video

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது... வங்கதேசம் முதலில் பேட்டிங்

கொல்கத்தா : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும் சேர்ந்து வங்கதேச அணியின் 10 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள் வீழ்த்தி விக்கெட் வேட்டையாடினார். வங்கதேசம் எந்த வகையிலும் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கவில்லை.

முதல் பகல் - இரவு டெஸ்ட்

முதல் பகல் - இரவு டெஸ்ட்

இந்தியா - வங்கதேசம் ஆடும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. பயங்கர பில்டப்புக்கு மத்தியில் இந்த போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்து பற்றி அளவுக்கு அதிகமான விவாதம் நடந்தது.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிற்கும் பொதுவான ஆடுகளமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, போட்டி ஐந்து நாட்களும் நடக்கும் வகையில் ஆடுகளம் இருப்பதாக கூறப்பட்டது.

டாஸ் வென்ற வங்கதேசம்

டாஸ் வென்ற வங்கதேசம்

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொமினுல் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதாக கூறி பேட்டிங் தேர்வு செய்தார், ஆனால், வங்கதேசம் படுமோசமான முறையில் பேட்டிங்கில் சொதப்பியது.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

7வது மற்றும் 11வது ஓவரில் முதல் இரண்டு விக்கெட்டால் வீழ்ந்தன. ஆனால், 20வது ஓவரில் ஆறு விக்கெட்களும், 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களும் வீழ்ந்தன. புதிய பிங்க் பந்தில் இந்திய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

நான்கு டக் அவுட்

நான்கு டக் அவுட்

வங்கதேச அணியின் மூன்று முக்கிய வீரர்களும், கடைசி பேட்ஸ்மேனும் டக் அவுட் ஆனார்கள். மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10 ரன்களை தொட்டார்கள். பந்து ஸ்விங் ஆனதால், பேட்ஸ்மேன்கள் பந்து எங்கே வருகிறது என்பதை பார்க்கவே திணறினர்.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

சுழற் பந்துவீச்சாளர்களில் ஜடேஜா மட்டுமே ஒரே ஒரு ஓவர் பெற்றார். அஸ்வின் ஒரு ஓவர் கூட வீசவில்லை. வேகப் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி ஆகிய மூவரே முதல் இன்னின்க்சை முடித்து வைத்தனர்.

ஹெல்மட் தாக்குதல்

ஹெல்மட் தாக்குதல்

ஷமி வீசிய பந்து ஒன்றில் லிட்டன் தாஸ் தலைப் பகுதியில் தாக்கப்பட்டார். அதனால், அழற்சி அடைந்த நிலையில், அவர் போட்டியில் இருந்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அவருக்கு பதில் வந்த மெஹிதி ஹாசன் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் ஆல் - அவுட்

வங்கதேசம் ஆல் - அவுட்

30.3 ஓவரில் வங்கதேசம் 106 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. ஐந்து நாட்கள் நடக்கும் என கூறப்பட்ட இந்த பகல் - இரவு டெஸ்ட் இரண்டு நாட்களை தாண்டுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

இஷாந்த் சர்மா அசத்தல்

இஷாந்த் சர்மா அசத்தல்

இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி இந்திய மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பின் ஒரே போட்டியில் 5 விக்கெட் ஹால் சாதனை செய்தார். உமேஷ் 3, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Story first published: Friday, November 22, 2019, 17:21 [IST]
Other articles published on Nov 22, 2019
English summary
IND vs BAN : Bangladesh all out for just 106 runs in 30.3 overs. Ishant Sharma took 5 wickets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X