For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN : அந்த வீரர் வேண்டவே வேண்டாம்.. கடைசி நேரத்தில் கேப்டன் கோலி எடுத்த முடிவு!

Recommended Video

IND VS BAN 2ND TEST DAY 1 | Bangladesh lost their wickets early

கொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி எந்த மாற்றமும் இல்லாமல் முதல் டெஸ்டில் ஆடிய அதே அணியை களமிறக்கினார்.

முதல் டெஸ்டுக்கு பின் ஒரு பந்துவீச்சாளருக்கு அதிக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. அவர் இரண்டாவது டெஸ்டில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கேப்டன் கோலி எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற அதே அணியை களமிறக்கினார். அதற்கு காரணம் இது இந்திய அணியின் முதல் பகல் - இரவு டெஸ்ட் என்பது தான்.

பகல் - இரவு டெஸ்ட்

பகல் - இரவு டெஸ்ட்

இந்தியா - வங்கதேசம் அணிகள் தங்கள் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

பிங்க் பந்து செயல்பாடு

பிங்க் பந்து செயல்பாடு

பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்து எப்படி செயல்படும் என்பது தெரியாத நிலையில் இருக்கிறது இந்திய அணி. இந்திய வீரர்கள் இதற்கு முன் ஒரு உள்ளூர் போட்டியில் மட்டுமே பிங்க் பந்தில் ஆடி உள்ளனர்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இருந்தே இந்திய வீரர்கள் பிங்க் பந்தில் பயிற்சி செய்து வருகின்றனர். பேட்டிங் செய்வதில் சிக்கல் இருப்பதாக பொதுவான கருத்து நிலவியது.

முதல் டெஸ்ட் வெற்றி

முதல் டெஸ்ட் வெற்றி

இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மூன்று நாட்களுக்குள் வெற்றி பெற்று, இரண்டாம் போட்டிக்கு கூடுதல் பயிற்சி செய்ய நேரத்தை பெற்றது. இந்தியா - வங்கதேச வீரர்கள் இரவு நேரத்தில் பிங்க் பந்தில் பயிற்சி செய்து வந்தனர்.

குல்தீப் யாதவ் சிறப்பு பயிற்சி

குல்தீப் யாதவ் சிறப்பு பயிற்சி

இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் உலகக்கோப்பை தொடருக்குப் பின் எந்த வகையான போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. டெஸ்ட் அணியிலும் அவர் வெளியே தான் அமர வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் பிங்க் பந்தில் தீவிர பயிற்சி செய்து வந்தார். அவருக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது ஏன் என்ற கேள்வி இருந்தது?

அணியில் இடம்

அணியில் இடம்

ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் பிங்க் பந்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் அவரை அணியில் தேர்வு செய்யவே பயிற்சி அளிக்கப்படுவதாக விமர்சகர்கள் கருத்து கூறினர்.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

எனினும், இரண்டாம் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியை களமிறக்கினார். பொதுவாக, அணியில் ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றம் செய்யும் கோலி, இந்த முறை எந்த மாற்றமும் செய்யவில்லை.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

இந்தியாவின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தார் கேப்டன் கோலி. வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பிங்க் பந்தில் இந்திய அணி சார்பாக முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசினார்.

Story first published: Friday, November 22, 2019, 14:08 [IST]
Other articles published on Nov 22, 2019
English summary
IND vs BAN : Captain Kohli’s final decision on team selection. kuldeep Yadav didn’t included in playing XI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X