For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி!

Recommended Video

Deepak Chahar praises Dhoni and CSK | தோனி மற்றும் சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்

நாக்பூர்: இந்திய அணியில் தீபக் சஹாரின் வெற்றிக்கு தோனியே காரணம் என்று ட்விட்டரில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட டி-20 சர்வதேச தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் அவர் டி20 போட்டியில் வரலாற்று சாதனைப் படைத்தார். தீபக் சஹாரின் இந்த வெற்றிக்கு தோனியே காரணம் என்று ட்விட்டரில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.

ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி??ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி??

சிஎஸ்கே அணியில் சாஹர்

சிஎஸ்கே அணியில் சாஹர்

முதன் முதலில் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தீபக் சாஹர் பெரிதும் சோபிக்கவில்லை. பெரும்பாலான ரசிகர்களின் பார்வை அவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது இருந்ததில்லை. ராஜஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது.

 சென்னை அணி

சென்னை அணி

இந்த நிலையில், சென்னை அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆரம்பத்தில் முதல் 10 ஓவருக்குள் வீசி வந்த தீபக் சஹாரை, கேப்டன் கூல் தோனி தான் அவரை இறுதி ஒவர்களை வீச வைத்து டெத் பௌலராக மாற்றினார்.

சாஹர் பேட்டி

சாஹர் பேட்டி

இந்தநிலையில் வங்கதேச போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து தீபக் சாஹர் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஆனார். இந்த போட்டியின் முடிவில் பேட்டி அளித்த தீபக் சாஹர், ஐபிஎல் போட்டிகளில் சென்னையில் விளையாடிய அனுபவமும், சிஎஸ்கே கேப்டன் தோனி தந்த ஊக்கமும் தான், இந்த வரலாற்று சாதனைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பற்றி

சென்னை பற்றி

சென்னையில் விளையாடிய அனுபவம் பற்றி கூறுகையில், "சென்னையில் விளையாடியது நிறைய உதவியது", "சென்னையில் இரவு நேரங்களில் நிறைய பனிப்பொழிவு இருக்கும், அதனால் நான் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறேன்" ஆனால் அதிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

தோனி அறிவுரை

தோனி அறிவுரை

நான் தவறு செய்யும் நேரங்களில் தோனியிடம் தொடர்ந்து பேச முயற்சிப்பேன், ஆனால் மஹி பாய் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்க மாட்டார். மாறாக, உங்களுக்கு உதவி தேவை என்று அவர் உணரும்போது போட்டி சூழ்நிலைகளை பொறுத்து அவர் சில ஆலோசனைகளை வழங்குவார்.

என்னை ஊக்கப்படுத்துவார்

என்னை ஊக்கப்படுத்துவார்

அவர் எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்துவார்; அதே போல் அவர் என்னிடம், உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நீங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவார்.

ட்விட்டரில் பாராட்டு மழை

ட்விட்டரில் பாராட்டு மழை

சாஹர் கடந்த டி 20 போட்டியில் மிகச்சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த உடனேயே, எம்.எஸ்.தோனி ட்விட்டரில் பிரபலமடையத் தொடங்கினார், சஹாரின் வெற்றியின் பின்னணியில் புகழ்பெற்ற கேப்டன் என்று தோனியை ரசிகர்கள் பலரும் பாராட்டினர்.

சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு

ட்விட்டரில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தீபக் சஹாரை பாராட்டும் போது, "உலகம் தீபக் சஹாரை நேற்று தான் பார்த்தது" ஆனால் எங்கள் சிஎஸ்கே அணி 2018 ஆண்டே பார்த்துவிட்டோம். 2017 ஆம் ஆண்டே தீபக் சஹாரிடம் அடுத்த ஆண்டு சி எஸ்கே அணிக்காக விளையாட தயாராக இரு என்று அவரிடம் தோனி சொன்னபோதே எங்களுக்கு நன்கு தெரியும்'' என்று கூறியுள்ளார்.

தோனி தந்த கிப்ட்:

இது தீபக் சாஹர் அல்ல; வைரம் ; இந்த வைரத்தை முன்பே சி.எஸ்.கே அணியில் மெருகூட்டிய ஹீரோ "தோனி". இந்த விலைமதிப்பற்ற பரிசுக்கு தோனிக்கு நன்றி என்று ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சாஹர் அன்றும் இன்றும்

6 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து நோ பால் வீசிய போது, தோனி கோபப்பட்டு தீபக் சஹாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். பின்பு தனது அடுத்தடுத்த பந்துகளில் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். அந்த அனுபவமே தீபக் சஹாரை இந்த சிறந்த பந்துவீச்சுக்கு காரணம் என்று ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 12, 2019, 14:22 [IST]
Other articles published on Nov 12, 2019
English summary
IND vs BAN : CSK and Dhoni is the reason for my success says Deepak Chahar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X