For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN : முதன்முறையாக நடக்கப் போகும் அந்த சம்பவம்.. வரலாறு படைக்கப் போகும் கிரிக்கெட் மைதானம்!

Recommended Video

Ind vs Ban | Eden garden to conduct historic test | வரலாறு படைக்கப் போகும் ஈடன் கார்டன்

கொல்கத்தா : ஆசியாவிலேயே பழமை வாய்ந்த கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம் புதிய வரலாற்று சாதனை செய்ய உள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.

அதன் மூலம், இந்திய அளவில் வரலாற்று சாதனை படைக்க உள்ளது ஈடன் கார்டன் மைதானம்.

உஷாரா இருங்க! தீவிரவாத அமைப்பின் ஹிட் லிஸ்ட்டில் டாப் இந்திய வீரர்.. கடிதத்தால் பரபரப்பு!உஷாரா இருங்க! தீவிரவாத அமைப்பின் ஹிட் லிஸ்ட்டில் டாப் இந்திய வீரர்.. கடிதத்தால் பரபரப்பு!

முதல் பகல் - இரவு டெஸ்ட்

முதல் பகல் - இரவு டெஸ்ட்

நவம்பர் 22 அன்று நடைபெற உள்ள இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்திய அணி முதன் முதலாக ஆட இருக்கும் பகல் - இரவு டெஸ்ட் போட்டி இது தான். அதே போல, இந்தியாவில் நடைபெறும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியும் இது தான்.

பல சாதனைகள்

பல சாதனைகள்

இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டியை ஈடன் கார்டன் மைதானம் நடத்த உள்ளது. ஏற்கனவே, இந்த மைதானம் பல கிரிக்கெட் சாதனைகளை கண்டுள்ளது. அவை பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது. ஈடன் கார்டன் மைதானம் சந்தித்த முக்கிய கிரிக்கெட் தருணங்களை, சாதனைகளை பற்றி பார்க்கலாம்.

பழமையான மைதானம்

பழமையான மைதானம்

டெஸ்ட் போட்டி நடத்தப்பட்ட ஆசியாவின் மிகப் பழமையான மைதானம் ஈடன் கார்டன் தான். இந்த மைதானம் ஜனவரி 5, 1934 அன்று துவங்கப்பட்டது. இதுவரை இந்த மைதானத்தில் 41 டெஸ்ட் போட்டிகள், 3௦ ஒருநாள் போட்டிகள், 7 டி20 போட்டிகள் நடந்துள்ளன.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் விவிஎஸ் லக்ஷ்மன். அவர் 1,217 ரன்கள் குவித்துள்ளார். சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 46 விக்கெட்கள் வீழ்த்தி இந்த மைதானத்தில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதிக சதம், ரன்

அதிக சதம், ரன்

லக்ஷ்மன் மற்றும் அசாருதீன் தலா 5 சதங்கள் அடித்து, இந்த மைதானத்தில் அதிக சதம் அடித்த வீரர்களாக உள்ளனர். ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2014ஆம் ஆண்டு 264 ரன்கள் குவித்து அதிக ரன்களை பதிவு செய்தார்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

ஈடன் கார்டன் மைதானத்தில் 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, கபில் தேவ், சேத்தன் சர்மாவுக்குப் பின் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த பெருமையை பெற்றார்.

மறக்க முடியாதது

மறக்க முடியாதது

ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு விஷயங்களால் ஈடன் கார்டன் மைதானத்தை மறக்க முடியாது. முதல் காரணம், 1987ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு வெளியே நடைபெற்ற முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஈடன் கார்டன் மைதானம் நடத்தியது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தன் முதல் உலகக்கோப்பையை வென்றது.

இரண்டாவது காரணம் என்ன?

இரண்டாவது காரணம் என்ன?

இரண்டாவது காரணம், 2001இல் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் கொடுத்து, பின் தோல்வி அடைந்தது. இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது.

பகல் இரவு டெஸ்ட் துவக்கம்

பகல் இரவு டெஸ்ட் துவக்கம்

பகல் இரவு டெஸ்ட் போட்டி 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே நடைபெற்றது. அப்போது முதல் இப்போது வரை இந்தியா ஒரு பகல் - இரவு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. வங்கதேச அணியும் இதுவரை பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதில்லை.

முதன்முறையாக மோதும் அணிகள்

முதன்முறையாக மோதும் அணிகள்

இந்த நிலையில், முதன்முறையாக இந்தியா - வங்கதேசம் இரு அணிகளும் ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. அந்த வரலாற்று சாதனையையும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Story first published: Wednesday, October 30, 2019, 14:16 [IST]
Other articles published on Oct 30, 2019
English summary
IND vs BAN : Eden Garden about to conduct historic test match between India and Bangladesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X