For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் வரலாற்றை புரட்டிப் போட்ட இந்தியா.. இதுவரை எந்த அணியும் செய்யாத இமாலய சாதனை!

Recommended Video

India vs Bangladesh 2nd test | India win by an innings and 46 runs

கொல்கத்தா : வங்கதேச அணியை இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை செய்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி மூலம் பல்வேறு சாதனைகளை செய்து மிரட்டிய இந்திய அணி, அந்த இமாலய சாதனையையும் செய்தது.

கேப்டன் கோலியும் பல்வேறு சாதனைகளை வாரிக் குவித்துள்ளார். தோனியின் முக்கியமான கேப்டன்சி சாதனை ஒன்றையும் கேப்டன் விராட் கோலி முறியடித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் முதல் பகல் - இரவு டெஸ்ட் என்ற வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக அமைந்தது. இந்தியா இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி மூன்றாம் நாளில், ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

7வது வெற்றி

7வது வெற்றி

இந்தப் போட்டியின் வெற்றி மூலம் இந்திய அணி கடைசியாக தான் ஆடிய ஏழு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது. இதுவே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நீண்ட வெற்றிப் பயணம் ஆகும்.

தோனியை முந்திய கோலி

தோனியை முந்திய கோலி

தோனியின் தலைமையில் கடந்த 2013ஆம் ஆண்டில் இந்தியா தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து இருந்தது. அதை முறியடித்துள்ள கோலி, தொடர்ந்து ஏழு போட்டிகளில் கேப்டனாக இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

இன்னிங்க்ஸ் வெற்றி சாதனை

இன்னிங்க்ஸ் வெற்றி சாதனை

அதிக இன்னிங்க்ஸ் வெற்றி பெற்ற இந்திய கேப்டன்களில் கடந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த கோலி, இந்தப் போட்டியில் கிடைத்த இன்னிங்க்ஸ் வெற்றி மூலம் 11 இன்னிங்க்ஸ் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளார். தோனி 9 இன்னிங்க்ஸ் வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

கோலி குவித்த வெற்றிகள்

கோலி குவித்த வெற்றிகள்

டெஸ்ட் அணி கேப்டனாக கோலி 33 வெற்றிகள் பெற்று, அதிக டெஸ்ட் போட்டி வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டரை பின்தள்ளி ஐந்தாம் இடத்தை பிடித்தார்.

12வது தொடர் வெற்றி

12வது தொடர் வெற்றி

வங்கதேச தொடரை 2 - 0 என கைப்பற்றிய இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 12வது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் அதிகபட்சமாக தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 இன்னிங்க்ஸ் வெற்றிகள்

4 இன்னிங்க்ஸ் வெற்றிகள்

இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நான்காவது இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் போட்டிகளில் இமாலய சாதனையாகும்.

டெஸ்ட் வரலாற்றில் சாதனை

டெஸ்ட் வரலாற்றில் சாதனை

டெஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் தொடர்ந்து நான்கு போட்டிகளில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி இதற்கு முன் ஆடிய தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் கடைசி இரு போட்டிகளில் பெற்ற இன்னிங்க்ஸ் வெற்றிகளுடன், வங்கதேச டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, November 24, 2019, 17:59 [IST]
Other articles published on Nov 24, 2019
English summary
IND vs BAN : India creates history in test cricket after fourth consecutive innings victory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X