வங்கதேச கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே!

Indian squad Announced For Bangladesh Series | வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை : இந்தியா - வங்கதேசம் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இதில் டி20 அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அடுத்த குறி இது தான்.. தோனி எடுத்த அதிரடி முடிவு.. கசிந்த தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

தற்போது தென்னாப்பிரிக்க டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆடி முடித்துள்ள இந்தியா அணி இரண்டு தொடரையும் கைப்பற்றி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக டி20, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

கோலி ஓய்வு

கோலி ஓய்வு

இதில் மிக முக்கிய மாற்றமாக டி20 தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டார். ரோஹித் சர்மா அவருக்கு பதிலாக கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளனர்.

கங்குலி ஒப்புதல்

கங்குலி ஒப்புதல்

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆகி இருக்கும் நிலையில் அறிவிக்கப்படும் முதல் இந்திய அணி இது என்பது குறிப்பிடத்தக்கது. கங்குலி பெரிய அளவில் இந்த அணித் தேர்வில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்றாலும் அவர் தான் அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்கள் சந்திப்பு

கேப்டன்கள் சந்திப்பு

இந்த நிலையில், பிசிசிஐ தலைமையகத்தில் கேப்டன்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவை சந்தித்தனர் தேர்வுக்குழு உறுப்பினர்கள். பின்னர் ஒரே நேரத்தில் வங்கதேச தொடரில் பங்கேற்க உள்ள டெஸ்ட் மற்றும் டி20 அணியை அறிவித்தனர்.

இந்திய டி20 அணி

இந்திய டி20 அணி

இந்திய டி20 அணி வீரர்கள் - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்க்டன் சுந்தர், க்ருனால் பண்டியா, சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, சிவம் துபே, ஷர்துல் தாக்குர்

இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சாஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் வாய்ப்பு

ரிஷப் பண்ட் வாய்ப்பு

ரிஷப் பண்ட் சரியாக ஆடாத நிலையில் அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்ட நிலையில், அவருக்கு டி20, டெஸ்ட் அணி இரண்டிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்துள்ளது.

சஞ்சு சாம்சன் தேர்வு

சஞ்சு சாம்சன் தேர்வு

சஞ்சு சாம்சன் இந்தியா ஏ தொடர் மற்றும் ஹசாரே தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி வரும் நிலையில் அடுத்தகட்ட விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக டி20 அணியில் இடம் பெற்றுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார் சாம்சன்.

சிவம் துபே ஏன்?

சிவம் துபே ஏன்?

மும்பை வீரரான சிவம் துபே ஹசாரே தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். ஆல் - ரவுண்டர் என்றாலும் அவரது பேட்டிங் திறனுக்காகவே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் சிவம்.

தொடர் அட்டவணை

தொடர் அட்டவணை

இந்தியா - வங்கதேசம் மோதும் டி20 தொடர் நவம்பர் 3, 7 மற்றும் 10ஆம் தேதிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 14 - 18 மற்றும் நவம்பர் 22 - 26 தேதிகளிலும் நடைபெற உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Team India for Bangladesh T20 and test series announced. Here are the full list of Indian squad for Bangaldesh T20 series and test series.
Story first published: Thursday, October 24, 2019, 17:42 [IST]
Other articles published on Oct 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X