For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே இப்படிதான்.. எவ்ளோ நாள்தான் டொக்கு வைச்சுகிட்டே இருக்கிறது.. அதிர வைக்கும் டெஸ்ட் மன்னன்!

இந்தூர் : இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா வேறு ஒரு பரிமாணத்துக்கு மாறி இருக்கிறார்.

கடந்த ஆண்டு வரை மிக மிக பொறுமையாக பேட்டிங் ஆடி வந்த புஜாரா, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முதல் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

ஒரு வகையில் ரோஹித் சர்மா தான் இந்த மாற்றத்துக்கு காரணம். மேலும், இந்திய அணியின் டெஸ்ட் போட்டி திட்டங்களை நிறைவேற்றும் வகையில் தன் பேட்டிங் திறனை மாற்றிக் கொண்டுள்ளார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

புஜாரா கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அரங்கில் அறிமுகம் ஆனார். அப்போது முதல் அவர் நிதான ஆட்டம் ஆடி வருகிறார். அது அவரது இயல்பாகவே இருந்தது. டி20 வரவிற்கு பின் டெஸ்ட் போட்டியிலும் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அதை பற்றி கவலைப்படாத ஒருவராக இருந்தார் புஜாரா.

டிராவிட் ஆட்டம்

டிராவிட் ஆட்டம்

ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு தூணாக இருந்து டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்ச்சியை தடுப்பார், அவரது ஓய்வுக்குப் பின், புஜாரா டிராவிட் ஆட்டத்தை தொடர்ந்து வந்தார். அடுத்த டிராவிட் என்று சற்று மிகைப்படுத்தப்பட்ட பாராட்டையும் பெற்றுள்ளார்.

குவிந்த பாராட்டு

குவிந்த பாராட்டு

கடந்த ஆண்டு சிறப்பான பார்மில் இருந்த புஜாரா, ஆஸ்திரேலியாவில் தனி ஆளாக இந்தியா அணியை கரை சேர்த்தார். அப்போது அவரது நிதான ஆட்டம், டெஸ்ட் போட்டியில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கான செயல்முறை என பலராலும் பாராட்டப்பட்டது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

எனினும், சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், புஜாரா பார்ம் இழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

திணறல் ஆட்டம்

திணறல் ஆட்டம்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது புஜாரா பேட்டிங் குறித்த கவலை அதிகரித்தது. அவர் எப்போது பார்முக்கு திரும்புவார்? என்ற விமர்சனம் எழுந்தது.

அதிரடி வேண்டும்

அதிரடி வேண்டும்

அதே போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்தியா விரைவாக ரன் எடுத்து டிக்ளர் செய்ய வேண்டிய நிலையில் ஆடி வந்தது. ஒரு புறம் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வந்தார்.

அந்த மாற்றம்

அந்த மாற்றம்

அப்போது மிக மிக நிதானமாக ஆடி வந்தார் புஜாரா. அவர் அளவுக்கு அதிகமான டாட் பால்கள் ஆடினார். அப்போது இடைவேளை வந்தது. அப்போது அணி நிர்வாகம் அவரிடம் என்ன கூறியது என்பது தெரியவில்லை. அதன் பின் வந்த புஜாரா வேறு ஒருவராக இருந்தார். எதிரில் இருந்த ரோஹித் சர்மாவுக்கு இணையாக அதிரடி காட்டி சிக்ஸர்களை தெறிக்க விட்டார் புஜாரா.

அதிரடி

அதிரடி

அப்போது முதல் புஜாரா நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து வருகிறார். அதிக டாட் பால்கள் ஆடுவதில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 2 சிக்ஸ், இரண்டாம் டெஸ்டில் 1 சிக்ஸ் அடித்தார்.

வங்கதேச டெஸ்ட்

வங்கதேச டெஸ்ட்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா அதிரடியாக ஆடி 72 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். சிக்ஸ் அடிக்காவிட்டாலும், 9 ஃபோர் அடித்து ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 75.

நிரந்தர மாற்றமா?

நிரந்தர மாற்றமா?

டெஸ்ட் மன்னனாக டொக்கு வைத்து நிறைய டாட் பால்கள் ஆடி எதிரணி பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றிய புஜாராவின் இந்த திடீர் அதிரடி ஆட்டம் நிரந்தரமானதா? என்பது தெரியவில்லை. பொறுந்திருந்து பார்க்கலாம்.

Story first published: Saturday, November 16, 2019, 19:12 [IST]
Other articles published on Nov 16, 2019
English summary
IND vs BAN : Pujara changed his pace of scoring runs in tests. After first test of South Africa series, he shifted the gears and running at fast pace.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X