For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிரணியாக இருந்தாலும் பரவாயில்லை.. கூப்பிட்டு உதவிய ரோஹித் சர்மா.. நெகிழ்ந்து போன வங்கதேச ரசிகர்!

Recommended Video

Hit man helped a bangladeshi fan

இந்தூர் : முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வங்கதேச ரசிகர் ஒருவருக்கு, இந்திய அணியின் முக்கிய வீரர் ரோஹித் சர்மா உதவி செய்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிக்கு முன் வங்கதேச அணியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்தில் தங்கள் அணி வீரர்கள் அருகே செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். எதிரணி ரசிகர் என்று பாராமல் அவருக்கு உதவி செய்துள்ளார் ரோஹித்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - வங்கதேசம் மோதிய முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி பகல் - இரவு ஆட்டமாக நடப்பதால், அதற்காக பிங்க் நிற பந்தில் பயிற்சி மேற்கொண்டனர்.

ரசிகர் தவிப்பு

ரசிகர் தவிப்பு

இந்தப் போட்டிக்கு முன்பு மைதானத்தில் இருந்த பாதுகாப்பு கெடுபிடி காரணமாக முன் வரிசையில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களை ஆதரித்து, உற்சாகம் அளிக்க முடியாமல் தவித்துள்ளார்

ரசிகர் ஏமாற்றம்

ரசிகர் ஏமாற்றம்

ஷோயப் என்ற அந்த ரசிகர், போட்டியை காண டிக்கெட் வாங்கினாலும் பின் வரிசையில் அமர வேண்டிய நிலையில், வங்கதே வீரர்களை அருகில் இருந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர்கள் பயிற்சியின் போதும் அவரை வீரர்கள் அருகே வரவிடாமல் பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர்.

தகவலை அறிந்த ரோஹித்

தகவலை அறிந்த ரோஹித்

இந்த தகவல் ரோஹித் சர்மாவுக்கு தெரிய வந்துள்ளது. அவர் அந்த ரசிகரை அழைத்து பேசி இருக்கிறார். என்னிடம் முன்பே உதவி கேட்டு இருக்கலாமே எனக் கூறி இருக்கிறார். பின் அவருக்கு உதவி செய்துள்ளார்.

என்ன உதவி?

என்ன உதவி?

முதல் டெஸ்ட் நடக்கும் இந்தூரின் ஹோல்கார் மைதான அதிகாரிகளிடம், பேசி அவருக்கு ரோஹித் அருகே இருக்கும் பார்வையாளர்கள் அறையில் இடம் அளித்துள்ளனர். அதனால், அவர் வீரர்களை அருகில் இருந்து பார்க்க முடியும்.

சிறப்பு அனுமதி

சிறப்பு அனுமதி

அதே போல, அவர் மைதானத்தின் எந்த வாயில் வழியாகவும் உள்ளே வர சிறப்பு அனுமதி அளித்து ஒரு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டை இருக்கும் பட்சத்தில் பாதுகாவலர்கள் அவரை தடுக்க மாட்டார்கள்.

வங்கதேச ரசிகர் பெருமிதம்

வங்கதேச ரசிகர் பெருமிதம்

இந்திய டி20 அணி கேப்டன் ரோஹித் சர்மா, தனக்கு செய்த உதவியை கண்டு நெகிழ்ந்து போய் இருக்கிறார் வங்கதேச ரசிகர். ரோஹித் சர்மாவுக்கு பெரிய மனது என புகழ்ந்து இருக்கிறார்.

கேட்டு அறிந்தார்

கேட்டு அறிந்தார்

இந்த சம்பவம் பற்றி விரிவாக பேசினார் ஷோயப். "ரோஹித் என்னை ஏன் சந்திக்கவில்லை என்று கேட்டார் இந்தியாவில் கடும் பாதுகாப்பு காரணங்கள் இருப்பதால் என்னால் சந்திக்க முடியவில்லை என்றேன். அவர் என் சூழ்நிலை, எங்கே தங்கி இருக்கிறேன் என்பது பற்றி கேட்டு அறிந்தார்" என்றார்.

அடையாள அட்டை

அடையாள அட்டை

"அதன் பின் ஒரு நபர் என்னை மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். இந்திய ரசிகர் சுதீர் என்னை அங்கே அழைத்துச் சென்றார். அங்கே என்னை புகைப்படம் எடுத்தார்கள். பாஸ்போர்ட் நகலை கேட்டார்கள். மாலை நான்கு மணிக்கு வருமாறு கூறினார்கள். அப்போது நான் அங்கே சென்றேன். என் அடையாள அட்டை தயாராக இருந்தது" என்றார்.

புகழ்ந்து தள்ளினார்

புகழ்ந்து தள்ளினார்

இந்த சம்பவத்துக்குப் பின் ஷோயப், ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளினார். அவர் மிகப் பெரிய மனிதர். பெரிய மனம் கொண்ட பெரிய கிரிக்கெட் வீரர் என ரோஹித் சர்மாவை பாராட்டினார். பின்னர் ரோஹித் சர்மா, அவரை ஹோட்டல் அறையில் சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்தார் ஷோயப்.

Story first published: Friday, November 15, 2019, 15:45 [IST]
Other articles published on Nov 15, 2019
English summary
IND vs BAN : Rohit Sharma helped a bangladeshi fan to get special access in Holkar stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X