டி20 கிங்.. மீண்டும் நிரூபித்த அதிரடி மன்னன்.. கவாஸ்கர், கபில் தேவ் வரிசையில் இணைந்து மிரட்டல்!

கவாஸ்கர், கபில் தேவ் வரிசையில் ரோஹித்

ராஜ்கோட் : இந்திய அணியின் துவக்க வீரரும், தற்காலிக கேப்டனுமான ரோஹித் சர்மா, டி20 போட்டியில் மேலும் ஒரு முக்கிய மைல்கல் சாதனை செய்து பல்வேறு சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா, தன் நூறாவது சர்வதேச டி20 போட்டியில் ஆடி புதிய மைல்கல்லை எட்டினார்.

இதன் மூலம் இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.

முதல் டி20யில் சாதனை

முதல் டி20யில் சாதனை

வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆடிய போது ரோஹித் சர்மா தன் 99வது டி20 போட்டியில் ஆடினார். அதன் மூலம், இந்திய அளவில் தோனியை முந்தி அதிக சர்வதேச டி20 போட்டியில் ஆடிய வீரர் என்ற சாதனையை செய்தார்,

தோனி

தோனி

தோனி 98 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். தோனி அதிக டி20 போட்டிகளில் ஆடிய இந்தியர் என்ற சாதனையை நீண்ட நாட்களாக வைத்திருந்த நிலையில் அதை முறியடித்து இருந்தார் ரோஹித் சர்மா.

நூறாவது போட்டி

நூறாவது போட்டி

இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி ரோஹித் சர்மாவின் நூறாவது டி20 போட்டியாக அமைந்தது. இந்திய அளவில் நூறு டி20 போட்டிகளில் ஆடிய வீரர் ரோஹித் சர்மா தான். எனினும், மகளிர் கிரிக்கெட்டில் அவரை விட அதிக போட்டிகளில் ஒருவர் ஆடி இருக்கிறார்.

இந்திய அளவில் இரண்டாம் இடம்

இந்திய அளவில் இரண்டாம் இடம்

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டையும் சேர்த்து, ரோஹித் சர்மா இந்திய அளவில் நூறு சர்வதேச டி20 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் யார்?

முதல் இடத்தில் யார்?

இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நூறுக்கும் அதிகமான சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். இந்திய அளவில் நூறு சர்வதேச டி20 போட்டிகளை எட்டிய முதல் நபர் அவர் தான்.

ஆடவர்களில் இரண்டாம் இடம்

ஆடவர்களில் இரண்டாம் இடம்

ஆடவர் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியவர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் அப்ரிடி - 99 போட்டிகள், தோனி - 98 போட்டிகள் உள்ளனர்.

முதல் இடத்தில் யார்?

முதல் இடத்தில் யார்?

முதல் இடத்தில் பபாகிஸ்தான் அணியின் ஷோயப் மாலிக் இருக்கிறார். அவர் 111 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் பாகிஸ்தான் அணியில் இடம்பெறாத நிலையில், விரைவில் ரோஹித் சர்மா அவரது சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஒட்டு மொத்தமாக..

ஒட்டு மொத்தமாக..

மகளிர் கிரிக்கெட்டையும் சேர்த்து பார்த்தால் ரோஹித் சர்மா 12வது இடத்தையே பெறுகிறார். உலக அளவில் பத்து வீராங்கனைகள் நூறுக்கும் மேற்பட்ட சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ளனர்.

ஜாம்பவான்கள் வரிசை

ஜாம்பவான்கள் வரிசை

இந்திய அளவில் முதன் முதலில் நூறு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர் சுனில் கவாஸ்கர். அதே போல, இந்திய அளவில் முதன் முதலில் நூறு ஒருநாள் போட்டிகளில் ஆடிய வீரர் கபில் தேவ். இவர்கள் வரிசையில் டி20யில் இந்திய அளவில் முதன் முதலில் நூறு போட்டிகள் மைல்கல்லை எட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

தன் நூறாவது டி20 போட்டியில் பட்டையைக் கிளப்பிய ரோஹித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்து மிரட்டினார். ஆறு சிக்ஸ் அடித்து வங்கதேச அணியை நிலைகுலையச் செய்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Rohit Sharma joined legends list after playing in his 100th T20I. He also becomes first male cricketer in India to reach 100 T20I.
Story first published: Thursday, November 7, 2019, 22:34 [IST]
Other articles published on Nov 7, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X