சதிக்கு பலியாகி விட்டார் ஷகிப் அல் ஹசன்.. போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்.. வங்கதேசத்தில் பரபரப்பு!

Shakib fans protest against ICC | ஷகிப்புக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்

துபாய் : ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிஎன்ஜி அணி தேர்வாகி உள்ளது.

அது என்னப்பா பிஎன்ஜி அணி? என்று குழம்பினால் பப்புவா நியூ கினியா அணியை தான் சுருக்கி பிஎன்ஜி அணி என்கிறார்கள்.

ஆஸ்திரேலியா அருகே இருக்கும் தீவு நாடான பப்புவா நியூ கினியா அணி முதன் முறையாக ஒரு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இந்த நிலையில், வங்கதேசத்தில் ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊர் மற்றும் தலைநகர் தாகாவில் அவருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ட்ரைக் நடந்தது

ஸ்ட்ரைக் நடந்தது

இந்தியா - வங்கதேசம் டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு வங்கதேச வீரர்கள் தயாராகி வந்தனர். அதற்கு முன்பாக, ஷகிப் அல் ஹசன் தலைமையில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டு முடிந்து இருந்தது.

குழப்பம்

குழப்பம்

அதனால், வங்கதேச கிரிக்கெட்டில் குழப்பம் நீடித்து வந்தது. அந்த குழப்பத்திற்கு இடையே, பெரிய அதிர்ச்சியாக ஐசிசி ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது.

தொடர்பு கொண்ட நபர்

தொடர்பு கொண்ட நபர்

கடந்த ஜனவரி 2018இல் தொடங்கி ஏப்ரல் 2018 வரை வங்கதேச அணி ஆடிய முத்தரப்பு தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் அணியின் உள் விவரங்கள் அல்லது மேட்ச் பிக்ஸிங் செய்யும் நோக்கத்துடன் ஒருவர் ஷகிப்பை தொடர்பு கொண்டுள்ளார்.

ஐசிசி தடை

ஐசிசி தடை

அவரிடம் பணம் பெறாத போதும், அவருக்கு எந்த வகையிலும் தகவல் அளிக்காத போதும், விதிப்படி ஐசிசியிடம் ஷகிப் அல் ஹசன் புகார் தெரிவிக்கவில்லை. அதனால், ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் முன் தேதி இட்டு தடை விதித்தது.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை

அதனால், இந்தியா - வங்கதேச தொடரில் ஷகிப் ஆட முடியாத நிலை ஏற்படுள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் 2020 டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாது.

அதிர்ந்து போன ரசிகர்கள்

அதிர்ந்து போன ரசிகர்கள்

ஸ்ட்ரைக்கை ஒட்டி நடந்த சம்பவங்கள் மற்றும் ஐசிசி தடை இரண்டும் வேறு வேறு என்றாலும், வங்கதேச ரசிகர்கள் சில நாட்களில் நடந்த சர்ச்சைக்குரிய இந்த சம்பவங்களால் அதிர்ந்து போய் உள்ளனர்.

700 பேர் போராட்டம்

700 பேர் போராட்டம்

வங்கதேச ரசிகர்கள் சுமார் 700 பேர் ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊரான மகுராவில் திரண்டு ஐசிசி உடனடியாக தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஷகிப் சதிகளுக்கு பலியாகி விட்டார் என்ற பதாகை ஏந்தி சென்றனர் ரசிகர்கள்.

கடும் கோபம்

கடும் கோபம்

தலைநகர் தாகாவில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். எனினும், அந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. அதே போல, இணையதளத்தில் வங்கதேச ரசிகர்கள் கடும் கோபமாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Shakib Al Hasan fans protest against ICC in Bangladesh. They carried placards which said Shakib was a victim of Conspiracy.
Story first published: Wednesday, October 30, 2019, 19:15 [IST]
Other articles published on Oct 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X