கங்குலி.. அடுத்த சம்மர்.. ஆஸ்திரேலியா வரும் போது மறந்துடாதீங்க.. தூது விட்ட ஷேன் வார்னே!

சிட்னி : இந்தியா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா தன் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஆடி வருகிறது.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

இந்த நிலையில், இந்தியாவை தொடர்ந்து பகல் - இரவு டெஸ்ட் ஆட வற்புறுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் வார்னே தனிப்பட்ட முறையில் கோரிக்கை விட்டுள்ளார். இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் இதே போன்ற கோரிக்கை வைத்துள்ளார்.

பிரம்மாண்ட ஏற்பாடு

பிரம்மாண்ட ஏற்பாடு

இந்தியாவில் நடைபெறும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி என்பதால் பிசிசிஐ தலைவர் கங்குலி பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்தார். பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்தை குறிப்பிடும் வகையில் கொல்கத்தா நகரம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டது.

வார்னே கோரிக்கை

வார்னே கோரிக்கை

இந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆட ஒப்புக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து, அடுத்த வெயில் காலத்தில் (ஆஸ்திரேலியாவில் டிசம்பர் - ஜனவரி) ஆஸ்திரேலியா வரும் போது பகல் - இரவு டெஸ்ட் ஆடுவீர்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மைக்கேல் வான் கோரிக்கை

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஆஸ்திரேலியாவில் இரண்டு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடுமாறு கங்குலியிடம் கேட்டுக் கொண்டார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Shane Warne calls Ganguly and Kohli to play in Day - Night test in Australia
Story first published: Saturday, November 23, 2019, 21:49 [IST]
Other articles published on Nov 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X