தம்பி நல்லா பார்த்துக்க! விரலை காட்டி வெறியேத்தி விட்ட கோலி.. மாங்கு மாங்கென்று அடித்த இந்திய வீரர்!

Mayank Agarwal 243 runs vs Bangladesh | Ind vs Ban 1st test day 2 | இரட்டை சதம் அடித்தார் அகர்வால்

இந்தூர் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி, மயங்க் அகர்வாலை இரட்டை சதம் மற்றும் முச்சதம் அடிக்க தூண்டி விட்டு சைகை காட்டினார்.

கேப்டனின் வார்த்தையை காப்பாற்ற அதிரடியாக ஆடி இரட்டை சதம் கடந்தார் மயங்க் அகர்வால். விராட் கோலி - மயங்க் அகர்வால் இடையே ஆன சைகை நிகழ்வு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியால் இந்திய அணியின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை சரசரவென இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் துவக்க வீரர் ரோஹித் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினார். புஜாரா 54, ரஹானே 86 ரன்கள் அடித்து அவருடன் சிறப்பான கூட்டணி அமைத்தனர்.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

கேப்டன் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனினும், மயங்க் அகர்வால் நீண்ட நேரம் களத்தில் நின்று சதம் கடந்தார். பின் அவர், ஜடேஜாவுடன் இணைந்து சிறப்பாக ஆடினார்.

மயங்க் அகர்வால் அபாரம்

மயங்க் அகர்வால் அபாரம்

234 பந்துகளில் 150 ரன்களை கடந்தார் மயங்க் அகர்வால். அவர் 32 ரன்கள் அடித்து இருந்த போது கொடுத்த கேட்ச்சை தவறவிட்ட வங்கதேச அணி, அதன் பலனை அனுபவித்து வந்தது.

இரண்டு விரல்கள்

இரண்டு விரல்கள்

மயங்க் அகர்வால் 150 ரன்கள் அடித்த பின் பேட்டை உயர்த்தி காட்டிய போது, அறையில் இருந்த கோலி, இரண்டு விரல்களை உயர்த்தி சைகை காட்டினார். மயங்க் அகர்வாலை இரட்டை சதம் அடிக்குமாறு கூறினார்.

சிக்ஸ் அடித்து அதிர வைத்தார்

சிக்ஸ் அடித்து அதிர வைத்தார்

அதை ஒப்புக் கொண்டு தலையாட்டிய மயங்க், அடுத்த 69 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இரட்டை சதம் எட்டினார். அதிலும், சிக்ஸ் அடித்து அவர் இரட்டை சதம் கடந்தது மைதானத்தை அதிர வைத்தது.

நிறைவேற்றிய மயங்க்

நிறைவேற்றிய மயங்க்

இரட்டை சதம் அடித்த பின் பேட்டை உயர்த்திக் காட்டிய மயங்க் அகர்வால், கோலியை நோக்கி இரண்டு விரல்களை காட்டி, தான் கோலி கேட்ட இரட்டை சதத்தை அடித்து விட்டேன் என கூறினார்.

மூன்று விரல்கள்

மூன்று விரல்கள்

அப்போதும் விடாத கேப்டன் கோலி மூன்று விரல்களை காட்டினார். முச்சதம் அடிக்குமாறு மயங்க் அகர்வலை தூண்டி விட்டார். அப்போது இந்தியா 400 ரன்களை தாண்டி ஏன் குவித்து விரைவாக 500 ரன்களை எட்ட வேண்டிய நிலையில் இருந்தது.

அதிரடி ஆட்டம்

கேப்டன் வேறு முச்சதம் அடிக்க தூண்டி விட்டதால் மயங்க் அகர்வால் அதிரடிக்கு மாறினார். அடுத்த 27 பந்துகளில் 41 ரன்கள் குவித்த அவர், 243 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இந்தியா டிக்ளர்

தான் ரன் அடிக்காவிட்டாலும், மயங்க் அகர்வாலுக்கு சைகை காட்டியே ரன் அடிக்க வைத்தார் கேப்டன் கோலி. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. அடுத்து வங்கதேசம் வேகமாக விக்கெட்களை இழந்து இன்னிங்க்ஸ் தோல்வியை நோக்கி ஆடி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
IND vs BAN : Virat Kohli asks for double and triple century from Mayank showing hand gestures. Mayank completed double century.
Story first published: Saturday, November 16, 2019, 14:35 [IST]
Other articles published on Nov 16, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more