For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 3 விஷயத்த செஞ்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும்..முடிவெடுப்பாரா கோலி...2வது டி20க்கான கணிப்புகள்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மீண்டு வர 3 விஷயங்களை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சி.எஸ்.கேவுக்கு இந்த 3 அணிதான் டஃப் கொடுக்குமாம்...அப்படி என்ன பலம் இருக்கு... முழு விவரம் இதோ சி.எஸ்.கேவுக்கு இந்த 3 அணிதான் டஃப் கொடுக்குமாம்...அப்படி என்ன பலம் இருக்கு... முழு விவரம் இதோ

இந்நிலையில் அடுத்த போட்டியில் கோலி 3 மாற்றங்களை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

அனுபவம்

அனுபவம்

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தனது திட்டம் தவறாக போனதே இந்த தோல்விக்கு காரணம் என்றும், இது சர்வதேச போட்டிகளில் இது ஒரு அனுபவம் என கோலி தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் அடுத்த போட்டியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் கணிக்கப்பட்டுள்ளது.

 ஓப்பனிங்

ஓப்பனிங்

முதல் டி20ல் ரோகித் - ராகுல் ஜோடி களமிறங்குவார்கள் என கோலி அறிவித்த நிலையில், பின்னர் ரோகித்துக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் ஓப்பனிங்கில் தவான் 12 ரன்களும், ராகுல் 1 ரன்னும் எடுத்தனர். அடுத்த போட்டியில் ரோகித் - ராகுல் இறக்கப்பட வேண்டும். இதுவரை 11 போட்டிகளில் ஒன்றாக ஆடியுள்ள இந்த ஜோடி 558 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் தவான் - ராகுல் இணை 8 இன்னிங்ஸ்களில் 308 ரன்களே எடுத்துள்ளது. குறிப்பாக ரோகித் - ராகுல் சேர்ந்தால் ரன் ரேட் 9.96 ஆக இருக்கும். ஆனால் தவான் - ராகுல் சேர்ந்தால் 7.89 மட்டுமே இருந்துள்ளது. எனவே தவானுக்கு பதிலாக ரோகித் சர்மாக இரங்க வேண்டும்.

 ராகுல் சஹார்

ராகுல் சஹார்

இந்திய அணியில் யுவேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சஹார் சேர்க்கப்பட வேண்டும். வருண் சக்கரவர்த்தி யோ யோ தேர்வில் தேர்ச்சி பெறாததால் ராகுல் சஹாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் டி20ல் 4 ஓவர் வீசிய சாஹல் ஒரே ஒரு விக்கெட் மட்டும் எடுத்து 44 ரன்களை வாரி வழங்கினார். சையது முஷ்டக் அலி கோப்பையிலும் அவர் சோபிக்கவில்லை. 6 ஆட்டங்களில் ஆடிய அவர் 5 விக்கெட் மட்டுமே எடுத்தார். ஆனால் ராகுல் சஹார் 11 விக்கெட் எடுத்தார்.

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

இந்திய அணியில் புவனேஷ்குமார் இல்லாமல் போயிருந்தால் அவருக்கு பதிலாக தீபக் சாஹர் தான் முதல் தேர்வாக இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் ஷர்துல் தாக்கூ களமிறக்கப்பட்டார். அதுவும் முதல் பவர் ப்ளேவில் பந்துவீசவில்லை. 2 ஓவர்கள் மட்டுமே வீசி விக்கெட் எடுக்காமல் 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் தீபக் சஹார் பவர் ப்ளேவில் சிறப்பானவர். இதுவரை மொத்த 62 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 42 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆனால் ஷர்துல் தாக்கூரோ 52 போட்டிகளில் ஆடியும் 17 விக்கெட்களே எடுத்துள்ளார். எனவே ஷர்துலுக்கு பதிலாக தீபக் சஹாருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Story first published: Saturday, March 13, 2021, 16:47 [IST]
Other articles published on Mar 13, 2021
English summary
3 Changes that India should make to get back in t20 series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X