இங்கிலாந்து ஜெயிக்க இந்த 5 விஷயங்களை செஞ்சே ஆகனும்..குழப்பத்தில் ரூட்,டிப்ஸ் கொடுத்த மைக்கேல் வாகன்

அகமதாபாத்: இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 5 விஷயங்களை செய்தே ஆக வேண்டும் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியிடம் 2வது டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது..

3வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 5 முக்கிய ஆலோசனைகளை மைக்கேல் வாகன் வழங்கியுள்ளார்.

 ரோரி பேர்ன்ஸ்

ரோரி பேர்ன்ஸ்

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோரி பேர்ன்ஸ் பெரிய அளவில் சோபிக்க வில்லை. இதனால் 3வது டெஸ்டில் அவருக்கு பதிலாக ஜாக் க்ராவ்லேவை களமிறக்க வேண்டும். அவர் காயம் இருந்து மீண்டு வந்துள்ளதால் தடுமாற்றம் இன்றி சுழற்பந்து தாக்குதலை சமாளிப்பார் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

வலது கை வீரர்கள்

வலது கை வீரர்கள்

இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் வலது கை வீரர்களாக இருக்க வேண்டும். இடது கை வீரர்களை அஸ்வின் சுலபமாக வெளியேற்றுகிறார். இதனால் டாப் ஆர்டரில் வலது கை வீரர்களை களமிறக்கினால் அஸ்வினின் தாக்குதலுக்கு முட்டுக்கட்டை போடலாம்.

பவுலிங் மாற்றம்

பவுலிங் மாற்றம்

2வது டெஸ்டில் காயம் காரணமாக வெளியேறி ஜோப்ரா ஆர்ச்சர் குணமடைந்திருந்தால் அவரை களமிறக்க வேண்டும். ஸ்டூவர் பிராட்டை வெளியேற்றிவிட்டு, ஆர்ச்சர், ஆண்டர்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோரின் காம்போவை பயன்படுத்தினால் இந்திய அணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கலாம்.

பாஸ்

பாஸ்

ஓய்வில் இருந்த ஜானி பேர்ஸ்டோ 3வது டெஸ்டில் களமிறங்குகிறார். இது இங்கிலாந்துக்கு நல்ல பலன் அளிக்கும். அதே போல மொயின் அலிக்கு பதிலாக டாம் பெஸ் களமிறங்குகிறார். பெஸ் முதல் டெஸ்ட் போட்டியில் கோலியின் விக்கெட்டை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். அது 3வது டெஸ்டிலும் பயன்படும் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

 டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட இங்கிலாந்து அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாது. இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs ENG 3rd Test: Michael Vaughan Tips to England for Victory
Story first published: Sunday, February 21, 2021, 10:19 [IST]
Other articles published on Feb 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X