For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை குத்தம் சொல்றதை விட்டுட்டு.. அந்த தம்பியை ஒழுங்கா விளையாட சொல்லுங்க.. முன்னாள் வீரர் அதிரடி!

பிர்மிங்காம் : இந்திய அணியில் தோனி சரியாக ஆடவில்லை என்ற குரல்\கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தோனியிடம் பிரச்சனை இல்லை. மற்ற வீரர்களிடம் தான் உள்ளது என ஒரு குறிப்பிட்ட வீரரை கை காட்டி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் நிதானமாக ஆடினார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. சரி, மற்ற வீரர்கள் எப்படி ஆடினார்கள்?

ராகுல் டக் அவுட்

ராகுல் டக் அவுட்

இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 338 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. சவாலான இலக்கை நோக்கி சேஸிங் செய்த போது, துவக்க வீரர் ராகுல் டக் அவுட் ஆனார். அவர் 9 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின், ரோஹித் சர்மா, விராட் கோலி ஜோடி சேர்ந்தனர்.

கோலி - ரோஹித் நிதானம்

கோலி - ரோஹித் நிதானம்

ஒரு விக்கெட் மட்டுமே போயிருந்தாலும், இருவரும் அளவுக்கு, மீறி நிதானம் காட்டினர். முதல் பத்து ஓவர் பவர்பிளேவில் இந்திய அணி வெறும் 28 ரன்கள் எடுத்து இருந்தது. இதனால், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் பெரிதாக அதிகரித்தது. ரோஹித் 102, கோலி 66 ரன்கள் எடுத்தாலும், அது ரன் ரேட்டை குறைக்கவில்லை.

பண்டியா அபாரம்

பண்டியா அபாரம்

ரிஷப் பண்ட் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். பண்டியா மட்டுமே அதிரடியாக ஆடினார். 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவரைக் கண்டு மட்டுமே இங்கிலாந்து அணி பயந்தது.

தோனி என்ன செய்தார்?

தோனி என்ன செய்தார்?

தோனி - ஜாதவ் கடைசி நான்கு ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பவுண்டரி அடிக்காமல், சிங்கிள் ரன்கள் ஓடினர். இது தான் மற்ற பேட்ஸ்மேன்களின் தவறுகளை மறைத்து தோனி மட்டுமே குற்றவாளி என்பது போன்ற பார்வையை கிளப்பிவிட்டது. இதைத் தான் மஞ்ச்ரேக்கர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ராகுல் ஒழுங்கா ஆடணும்

ராகுல் ஒழுங்கா ஆடணும்

தோனி போன்ற அனுபவ வீரரை குறை கூறி மேலும் அழுத்தம் கொடுப்பதை விட ராகுல் மற்றும் பிற பேட்ஸ்மேன்கள் ஒழுங்காக ஆட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

தோனி எப்படி ஆட வேண்டும்?

தோனி எப்படி ஆட வேண்டும்?

தோனி குறித்து கூறுகையில், தோனி 25 ஓவர்களுக்கு பின் பேட்டிங் ஆட வரும் போது முதலில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவில் எடுக்க வேண்டும். அதன் பின் அவர் வேகம் கூட்டலாம் என்றார்.

Story first published: Monday, July 1, 2019, 23:09 [IST]
Other articles published on Jul 1, 2019
English summary
IND vs ENG Cricket World cup 2019 : Rahul should be under pressure, not Dhoni says Manjrekar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X