For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி தலைக்கனம் இருக்கக் கூடாது.. இளம் வீரருக்கு வார்னிங்.. கம்பீர் அதிரடி!

மும்பை : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு அடுத்ததாக ஜொலித்த இளம் வீரர் என்றால் அது ஷுப்மன் கில் தான்.

துவக்க வீரராக ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான வேகப் பந்துவீச்சை சமாளித்து ரன் குவித்தார் ஷுப்மன் கில்.

இந்த நிலையில், அவர் அந்த வெற்றியை தலையில் ஏற்றாமல் நடந்து கொள்ள வேண்டும் என கவுதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஷுப்மன் கில் ஆட்டம்

ஷுப்மன் கில் ஆட்டம்

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் முதல் டெஸ்டில் மட்டும் பங்கு பெறவில்லை. இரண்டாவது டெஸ்டில் ஆடிய அவருக்கு அதுவே சர்வதேச டெஸ்ட் அறிமுகம். அந்தப் போட்டியில் 45 மற்றும் 35 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார்.

வெற்றி

வெற்றி

அடுத்ததாக சிட்னி டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த அவர், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் 91 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரால் தான் அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறலாம் என்ற நிலை முதன் முதலில் உருவானது.

கம்பீர் அறிவுரை

கம்பீர் அறிவுரை

அவரது வெற்றிகரமான ஆரம்பம் குறித்து பேசி இருக்கும் கம்பீர், அவரிடம் திறமை உள்ளது. ஆனால், அவர் தன் தலையை கீழேயே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது என கூறி உள்ளார். அதாவது இந்த முதல் வெற்றியை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம் என கூறி இருக்கிறார் கம்பீர்.

எதிர்பார்ப்பு வேண்டாம்

எதிர்பார்ப்பு வேண்டாம்

மேலும் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் உங்களுக்கு தேனிலவு போன்ற ஒரு ஆரம்பம் கிடைத்துள்ளது. நீங்கள் சிறப்பாக ஆடி இருக்கிறீர்கள். ஆனால், அவருக்கு கொஞ்சம் அவகாசம் அளிக்க வேண்டும். அவரிடம் அதிகம் எதிர்பார்க்கக் கூடாது என்றார் கம்பீர்.

Story first published: Wednesday, January 27, 2021, 17:37 [IST]
Other articles published on Jan 27, 2021
English summary
IND vs ENG : Gautam Gambhir warned Shubman Gill ahead of England test series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X