For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது அவர் வருவாரா? அதெல்லாம் இல்லை நம்பாதீங்க.. இங்கிலாந்து அணியில் திடீர் குழப்பம்!

சென்னை : இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இங்கிலாந்து அணியில் சில முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சின்னப்புள்ளத்தனமா சான்ட்விச்சை பிடுங்கிக்கிட்டாரு.. ஆஸி. கோச் மீது சரமாரி புகார்!சின்னப்புள்ளத்தனமா சான்ட்விச்சை பிடுங்கிக்கிட்டாரு.. ஆஸி. கோச் மீது சரமாரி புகார்!

அதில் நல்ல பார்மில் இருக்கும் ஜானி பேர்ஸ்டோவும் அடக்கம். அவரை விடுவித்தது தொடர்பாக முன்னாள் வீரர்கள் பொங்கி இருந்தனர்

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப், ஜானி பேர்ஸ்டோ முதல் டெஸ்ட் முடிந்த உடன் அணியுடன் இணைவார் என பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதாவது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்ற அர்த்தத்தில் அவர் பேசியது கவனம் பெற்றது.

விளக்கம்

விளக்கம்

இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஜானி பேர்ஸ்டோ மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்பார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஊடகப் பிரிவு வேக வேகமாக விளக்கம் அளித்துள்ளது. இதனால், இங்கிலாந்து அணி வட்டாரத்தில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திரும்பப் பெறப் போவதில்லை

திரும்பப் பெறப் போவதில்லை

ஜானி பேர்ஸ்டோ சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் வல்லவர். எனவே, அவரை இந்தியாவில் நடக்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அவருக்கு ஓய்வு அளித்ததை திரும்பப் பெறப் போவதில்லை என இங்கிலாந்து அணி தற்போது தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஓய்வு

ஓய்வு

டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் ஜானி பேர்ஸ்டோ ஆட வேண்டும் என்பதால் அவருக்கு நீண்ட டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணி தரப்பில் கூறப்படுகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும் என டெஸ்ட் தொடரின் போது தான் பார்க்க முடியும்.

Story first published: Saturday, January 30, 2021, 13:37 [IST]
Other articles published on Jan 30, 2021
English summary
IND vs ENG : Jonny Bairstow only join after second test says ECB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X