முக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளேயின் 11 என்ன?

அகமதாபாத்: 4வது டெஸ்ட் போட்டியை வென்றாகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கும் நிலையில் அணியின் ப்ளேயின் 11 யார் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நாளை அகமபதாபாத்தில் தொடங்குகிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இதற்காக வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் இப்போட்டிக்கான பிட்ச், அணி வீரர்கள், வெதர் ரிப்போர்ட் ஆகிய தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம்

கட்டாயம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் எனவே அதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

பிட்ச்

பிட்ச்

அகமதாபாத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவே பிட்ச் செயல்பட்டது. இந்நிலையில் 4வது டெஸ்டிலும் அதே போன்ற பிட்ச் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சிறிது சிரமம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3வது டெஸ்ட் பிட்ச் குறித்த சர்ச்சை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெதர்

வெதர்

போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் அடுத்த 5 நாட்களுக்கும் அதிக வெயில் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அங்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். அதே போல அகமதாபாத் மைதானத்தில் இந்த முறை சராசரியாக முதல் இன்னிங்ஸ் ரன் 373 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்திய அணியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். எனவே அணியில், ரோகித் சர்மா, சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜார, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் படேல், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs ENG Prediction: Playing XI, Pitch Report & Injury Update
Story first published: Wednesday, March 3, 2021, 18:21 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X