For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சக்ஸஸ்.. ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய மண் சந்திக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் சீரிஸ்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் பிப்.13ம் தேதி நடைபெறுகிறது. 3-வது, மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் முறையே பிப்ரவரி 24, மார்ச் 4 ஆகிய தேதிகளில் தொடங்குகிறது.

அதேபோல், ஐந்து 20 ஓவர் போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அவை முறையே மார்ச் 12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேயில் மார்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

என்னோட வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க டைரக்டர்ஸ் ஆர்வமா இருக்காங்க... நடராஜன் சொல்லியிருக்காரு! என்னோட வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க டைரக்டர்ஸ் ஆர்வமா இருக்காங்க... நடராஜன் சொல்லியிருக்காரு!

 கோவிட் ரிசல்ட்

கோவிட் ரிசல்ட்

முதல் டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, இரு அணி வீரர்களும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு நேற்று (ஜன.1) இந்திய வீரர்கள் அனைவருக்கும் நடந்த்தப்பட்ட கோவிட் பரிசோதனையில், எவருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

 சேப்பாக்கில் வீரர்கள்

சேப்பாக்கில் வீரர்கள்

இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனைவரும் நேற்று மாலையே சென்னை சேப்பாக் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீண்டும் வெளியுலகத்தை கண்ட மகிழ்ச்சியில் அங்கு அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.

 பயிற்சி ஸ்டார்ட்ஸ்

பயிற்சி ஸ்டார்ட்ஸ்

இந்நிலையில், இன்று (ஜன.2) தங்களது முதல் நாள் பயிற்சியில் இந்திய வீரர்கள் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். சேப்பாக் மைதானத்தில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல் ரவுண்ட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 இங்கிலாந்து நிலைமை?

இங்கிலாந்து நிலைமை?

அதேசமயம், இங்கிலாந்து அணி வீரர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதிலும் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதால் டெஸ்ட் தொடர் எந்த வித சிக்கலும் இன்றி டேக் ஆஃப் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

 அட்டாக் தொடருமா?

அட்டாக் தொடருமா?

ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வைத்தே சம்பவம் செய்து டெஸ்ட் தொடரை 2-1 என வென்றிருக்கும் இந்திய அணி, தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்தை துவம்சம் செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 கொரோனாவுக்கு பிறகு முதல் சீரிஸ்

கொரோனாவுக்கு பிறகு முதல் சீரிஸ்

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடரும் இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை. இந்த ஒருவருட காலத்தில், இந்திய மண்ணில் நடக்கப் போகும் முதல் கிரிக்கெட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 3, 2021, 9:12 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
ind vs eng team clears corona test - See players reaction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X