For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆடின வரைக்கும் போதும்.. அஸ்வினுக்கு டாட்டா பைபை.. கோலி அதிரடி திட்டம்.. காரணம் அந்த வீரர்!

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Recommended Video

IND VS NZ 2ND TEST | Ashwin may be dropped for 2nd test against kiwis

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் அஸ்வின் கை கொடுக்கவில்லை. அந்த காரணத்தால் அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக ஆல் - ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு ம,மோசமாக பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்களால் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 200 ரன்களை கூட தொட முடியவில்லை. நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பந்துவீச்சு சொதப்பல்

பந்துவீச்சு சொதப்பல்

பேட்டிங் மோசம் என்றால், பந்துவீச்சும் சுமாராகவே இருந்தது. இஷாந்த் சர்மா மட்டுமே துல்லியமாக பந்து வீசினார். அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆறுதல் அளித்தார். அவருக்கு அடுத்து சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் தான் சிறப்பாக பந்து வீசினார்.

அஸ்வின் 3 விக்கெட்கள்

அஸ்வின் 3 விக்கெட்கள்

சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காத நியூசிலாந்து ஆடுகளத்தில் அவர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதிக ரன்கள் கொடுத்தாலும், அவர் விக்கெட்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இடம் பெற வேண்டும்.

பேட்டிங் ஏமாற்றம்

பேட்டிங் ஏமாற்றம்

ஆனால், அவரை ஆல் - ரவுண்டர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் இந்திய அணி நிர்வாகம், அவரது பேட்டிங்கால் ஏமாற்றத்தில் இருப்பதாக தெரிகிறது. முதல் டெஸ்டில் அஸ்வின் முதல் இன்னிங்க்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சமீப காலமாக ஏமாற்றும் அஸ்வின்

சமீப காலமாக ஏமாற்றும் அஸ்வின்

அஸ்வின் கடந்த சில வருடங்களில் தன் முந்தைய பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்ற புகார் உள்ளது. எனினும், அவர் முழு நேர பந்துவீச்சாளராக தொடர்ந்து அணியில் இடம் பெற்று வருகிறார். கேப்டன் கோலி நீண்ட பேட்டிங் வரிசை வேண்டும் என நினைப்பது அவருக்கு சிக்கலாக மாறி உள்ளது.

ஜடேஜா நிலை

ஜடேஜா நிலை

மற்றொரு சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஜடேஜா, பேட்டிங்கில் கலக்கி வருகிறார். 2019 ஐபிஎல் தொடர் முதல் தன் பேட்டிங்கை பட்டை தீட்டி வந்த அவர், 2019 உலகக்கோப்பை தொடர் முதல் அணியில் முக்கிய பேட்ஸ்மேனாகவே மாறி விட்டார்.

10 அரைசதம், 1 சதம்

10 அரைசதம், 1 சதம்

2017 முதல் 31 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 996 ரன்கள் குவித்துள்ளார் ஜடேஜா. அதன் சராசரி 49.80. இதில் ஒரு சதம் மற்றும் 10 அரைசதம் அடங்கும். மறுபுறம் அஸ்வின் 36 இன்னிங்க்ஸ்களில் 573 ரன்களே எடுத்துள்ளார். இதன் சராசரி 17.36 மட்டுமே. ஒரே ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்த்துவதை பொறுத்தவரை அஸ்வின் ஒரு படி முன்னே இருக்கிறார். எனினும், ஜடேஜா கட்டுக் கோப்பாக ரன் கொடுக்காமல் பந்து வீசுவதில் சிறந்து விளங்குகிறார். அதோடு, அவரது சிறப்பான பேட்டிங் அவருக்கு சாதகமாக இருக்கிறது.

கோலி முடிவு

கோலி முடிவு

இந்த நிலையில், கேப்டன் கோலி, இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய அணி வட்டாரம் கூறுகிறது. ஜடேஜாவை அணியில் சேர்த்தால், அஸ்வின் தன் இடத்தை இழக்க நேரிடும்.

Story first published: Thursday, February 27, 2020, 11:41 [IST]
Other articles published on Feb 27, 2020
English summary
IND vs NZ : Jadeja may be picked for second test against New Zealand in place of Ashwin, as he is not doing good with batting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X