For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒழுங்கா வைகை ஆத்துல உலகக்கோப்பை வைங்கன்னு சொன்னேன்.. தெறிக்கவிடும் உலகக்கோப்பை மழை மீம்ஸ்!

Recommended Video

WORLD CUP 2019 | தெறிக்கவிடும் உலகக்கோப்பை மழை மீம்ஸ்

நாட்டிங்ஹாம் : உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா - நியூசிலாந்து மோத இருந்த போட்டி மழையால் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

நீண்ட நேரம் மழையால் போட்டி துவங்காததால் இந்திய ரசிகர்கள் வெறுப்படைந்தனர். சிலர் மீம்ஸ் போட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐசிசி) கலாய்த்து வருகின்றனர்.

போனால் போகட்டும்.. மழையால் ரசிகர்கள் கோபத்தில் இருக்க.. கொண்டாட்டத்தில் ஜடேஜா.. வைரல் போட்டோ! போனால் போகட்டும்.. மழையால் ரசிகர்கள் கோபத்தில் இருக்க.. கொண்டாட்டத்தில் ஜடேஜா.. வைரல் போட்டோ!

கடுமையான மழை

கடுமையான மழை

2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கிலாந்து நாட்டில் மழை கடுமையாக பெய்து வருகிறது. இந்த நேரத்தில், அங்கே உலகக்கோப்பை தொடர் நடந்து வருவதால், போட்டிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சுவாரசியம் போச்சு

சுவாரசியம் போச்சு

இதுவரை 17 போட்டிகளில் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இதனால், உலகக்கோப்பை தொடரின் சுவாரசியம் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியா ஆடிய போட்டிகளில் குறுக்கே வராமல் இருந்தது மழை.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மழை பெய்ததால், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதில் சிலர் ட்விட்டரில் மீம்ஸ் போட்டு தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சில -

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன் விருதுக்கு இந்த இரண்டு பேரும் தான் போட்டி போடுகிறார்களாம். மழை குறுக்கிடும் போட்டிகளில் எல்லாம் மைதான ஊழியர்கள் கடுமையாக உழைப்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவருக்குத் தான் ஆட்டநாயகன் விருது.!!

வைகை ஆத்துல வைங்க

மழையே பெய்யாமல் வறண்டு கிடைக்கும் வைகை ஆற்றில் போட்டியை வைங்க என்கிறார்.

குளத்துக்கு நடுவுல..

இந்த முறை உலகக்கோப்பை இப்படி தான் நடக்குது.. குளத்துக்கு நடுவுல மூங்கில் படகை மிதக்க விட்டு.. அதில் விளையாடுகிறார்கள்.

அப்பவே சொன்னார்

ஒருமுறை டி வில்லியர்ஸ் உலகக்கோப்பையை விட ஐபிஎல் சிறப்பானது என கூறி இருந்தார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர். ஆனால், ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தி முடிக்கபட்ட நிலையில், உலகக்கோப்பை தொடர் மழையால் தடுமாறி வருவதை சுட்டிக் காட்டி, டி வில்லியர்ஸ் சொன்னது சரி தான் என்கிறார்.

நீச்சல் குளம்

நீச்சல் குளம் போல இருக்கும் மைதானத்தை காட்டி, "ஐசிசி நீச்சல் (கிரிக்கெட் இல்லையாம்) உலகக்கோப்பை" என கலாய்த்துள்ளார்.

மழை கோப்பை

இது தான் மோசமான உலகக்கோப்பை. இது மழை கோப்பை!

தோனி கிளவுஸ்

தோனியின் கிளவுஸ் மீது காட்டிய அக்கறையை, எங்கே போட்டிகளை நடத்தலாம் என திட்டமிடுவதிலும் காட்டி இருக்கலாம் என்கிறார்.

குடையையும் சேர்த்துக்குங்க

2019 உலகக்கோப்பை முத்திரையில், குடையை சேர்த்து கிண்டல் செய்துள்ளனர்.

மழையில் போட்டி

மழையில் போட்டி நடத்த முயலும் ஐசிசி, கடற்கரை ஈர மண்ணில் ஆணி அடித்து, அலையை பிடித்து வருகிறதாம். செம!

இறுதிப் போட்டி மைதானம்

இறுதிப் போட்டி மைதானம் எப்படி இருக்கும்னு பார்த்துக்குங்க!

Story first published: Thursday, June 13, 2019, 17:17 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
IND vs NZ Cricket World cup 2019 : ICC trolled for planning World Cup during Rain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X