For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா ஜெயிக்கணும்னா இந்த 2 விக்கெட் எடுத்தால் போதும்.. நியூசி. கதை கந்தல் ஆயிடும்! #INDvsNZ

மான்செஸ்டர் : நியூசிலாந்து அணியின் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினால் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா தான் வெல்லும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அவரு செத்தா தான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை..! தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வீரர் அவரு செத்தா தான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை..! தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வீரர்

பரிதாப நிலையில் நியூசிலாந்து

பரிதாப நிலையில் நியூசிலாந்து

நியூசிலாந்து அணி லீக் சுற்றின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனினும், கடைசி மூன்று லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து மொத்த அணியே பார்ம் அவுட் ஆனது போல காட்சி அளிக்கிறது. அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.

இரண்டு விக்கெட்கள்

இரண்டு விக்கெட்கள்

நியூசிலாந்து அணியை பேட்டிங்கில் காப்பாற்றி வருவது இரண்டு வீரர்கள் மட்டுமே. ஒருவர் கேப்டன் கேன் வில்லியம்சன். மற்றொருவர் அனுபவ வீரர் ராஸ் டெய்லர். இவர்கள் இருவரின் விக்கெட்களை வீழ்த்தினாலே இந்தியாவின் வெற்றி பாதி உறுதி ஆகி விடும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

கேன் வில்லியம்சன் அபாரம்

கேன் வில்லியம்சன் அபாரம்

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் இவர்கள் இருவர் தான் முதல் இரு இடங்களில் இருக்கிறார்கள். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் வில்லியம்சன் ஆறாம் இடம் பிடித்துள்ளார். 7 இன்னிங்க்ஸ்களில் 481 ரன்கள் குவித்துள்ளார்.

ராஸ் டெய்லர் சுமார்

ராஸ் டெய்லர் சுமார்

ராஸ் டெய்லர் நியூசிலாந்து அணிக்கு அதிக ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தாலும், ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 25ஆம் இடத்தையே பிடித்துள்ளார். இதில் இருந்தே நியூசிலாந்து அணியின் பேட்டிங் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். டெய்லர் 7 இன்னிங்க்ஸ்களில் 261 ரன்கள் எடுத்துள்ளார்.

தனி திட்டம் வேண்டும்

தனி திட்டம் வேண்டும்

இவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்தினாலே நியூசிலாந்து பேட்டிங் சரிந்து விடும். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த இந்தியா தனி திட்டம் போட வேண்டும். குறிப்பாக மத்திய ஓவர்களில் தான் இவர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பு அதிகம். அதற்கேற்ப இந்தியா திட்டமிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, July 8, 2019, 19:32 [IST]
Other articles published on Jul 8, 2019
English summary
IND vs NZ Cricket World cup 2019 : India should take this two wickets early
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X