For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா தான் உலகக்கோப்பை ஜெயிக்கும்னு.. வாட்சப்-இல் இந்த மெசேஜ் வரும்.. தயவு செஞ்சு நம்பிறாதீங்க!!

நாட்டிங்ஹாம் : இந்தியாவின் உலகக்கோப்பை போட்டிமழையால் தடைபட்டு இருந்த நேரத்தை பயன்படுத்தி புதிய வதந்தி ஒன்றை கிளப்பி விட்டு வருகிறார்கள்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த போட்டி மழையால் நீண்ட நேரம் துவங்குவதில் தாமதம் ஆனது.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். எங்கே போட்டி கைவிடப்பட்டு விடுமோ? என்ற சோகத்தில் இருந்தனர். அப்போது அதை தொடர்பு படுத்தி, இந்தியா தான் உலகக்கோப்பை ஜெயிக்கும் என ஒரு வதந்தியை தொடங்கி வைத்து இருக்கிறார்கள்.

 இந்தியா - நியூஸி. போட்டி நடக்குமா? நடக்காதா?.. நிலவரம் எப்படி.. லண்டன் வானிலை மையம் என்ன சொல்கிறது? இந்தியா - நியூஸி. போட்டி நடக்குமா? நடக்காதா?.. நிலவரம் எப்படி.. லண்டன் வானிலை மையம் என்ன சொல்கிறது?

யூகங்கள்

யூகங்கள்

இந்த உலகக்கோப்பை தொடரில் இதற்கு முன் அணிகள் வென்ற உலகக்கோப்பை தொடரை சுட்டிக் காட்டி, அதே போல, 2019 தொடரிலும் நடக்கிறது. அதனால், இந்த அணி தான் வெற்றி பெறப் போகிறது என்ற யூகங்கள் அதிகமாக கிளம்பி வருகிறது.

காரணம் யார்?

காரணம் யார்?

முதன் முதலில் அந்த ட்ரென்ட்டை துவக்கி வைத்தது பாகிஸ்தான். அந்த அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அடுத்து இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

1992 உலகக்கோப்பை

1992 உலகக்கோப்பை

இதே போன்று தான் 1992 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு நடந்துள்ளது. அந்த உலகக்கோப்பை தொடரில் தான் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வென்றது. அப்போதும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது.

பாகிஸ்தான் ஜோசியம்

பாகிஸ்தான் ஜோசியம்

1992இலும் பாகிஸ்தான் அணி இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்றது. மூன்றாம் போட்டி கைவிடப்பட்டது. 1992இல், நடந்தது போலவே, 2019இலும் நடப்பதால் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வெல்லும் என ஒரு ஜோசியம் இணையத்தில் பரவியது.

1983 உலகக்கோப்பை

1983 உலகக்கோப்பை

அதே போல, இப்போது இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் என போலியாக ஒரு வதந்தி வலம் வருகிறது. அதில் இந்தியா உலகக்கோப்பை வென்ற 1983இல் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றது. மூன்றாம் போட்டி மழையால் கைவிடப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

2011 உலகக்கோப்பை

அதே போல, இந்தியா இரண்டாம் உலகக்கோப்பை வென்ற 2011இல் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. மூன்றாம் போட்டி மழையால் கைவிடப்பட்டது என கூறப்பட்டுள்ளது. அதே போல 2019இலும் நடந்து வருகிறது. எனவே, இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

டை ஆனது

டை ஆனது

ஆனால், உண்மையில் 1983 மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆடிய எந்த போட்டியும் மழையால் கைவிடப்படவில்லை. மாறாக, 2011இல் இந்தியா - இங்கிலாந்து போட்டி டை ஆகியுள்ளது. ஆனால், அது இரண்டாவது போட்டி.

மொக்கை வாங்க ரெடியா?

மொக்கை வாங்க ரெடியா?

இந்த செய்தி உங்களுக்கும், ட்விட்டர், வாட்சப்பில் வரலாம். இந்த தவறான புள்ளிவிவரம் கொண்ட வதந்தியை நம்பி, உங்கள் நண்பர்களிடம் இந்த பொய்யான ஜோசியத்தை சொல்லி, மொக்கை வாங்க வேண்டாம்.

Story first published: Thursday, June 13, 2019, 18:17 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
IND vs NZ Cricket World cup 2019 : India will win world cup rumour prediction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X