For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட் போல இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ராகுல்.. நியூசிலாந்தை சமாளிப்பாரா?

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்தின் புகழ்பெற்ற ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா - நியூசிலாந்து போட்டியில் இந்திய வீரர் ராகுல் மீண்டும் தன் பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டு துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

இதே மைதானத்தில் தான் 17 வயதே ஆன பார்த்திவ் பட்டேல் டெஸ்ட் போட்டிகளில் ஆகஸ்ட் 2002இல் அறிமுகம் ஆனார். தன் அறிமுகப் போட்டியில் அவர் சுமார் ஒன்றரை மணி நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்து, இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி, போட்டியை டிரா செய்ய உதவினார்.

IND vs NZ Cricket World cup 2019 : KL Rahul once again returned to opening the game

அதே மைதானத்தில் தன் இரண்டாம் இன்னிங்க்ஸ் போல, ஒருநாள் போட்டியில் மீண்டும் துவக்க வீரராக களமிறங்க உள்ளார் ராகுல். ஆனால், இப்போதும் அவரது துவக்க வீரர் இடம் நிரந்தரமல்ல. தற்காலிகமாக அந்த இடத்தை நிரப்பப் போகிறார்.

ராகுல் கிரிக்கெட் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போன்றது. 2017இல் ஆஸ்திரேலிய தொடரில் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் இலங்கை தொடர் வரை ராகுல் ரன் குவிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது 11 இன்னிங்க்ஸ்களில் 9 அரைசதம் அடித்தார் அவர்.

ஆனால், அடுத்த 15 இன்னிங்க்ஸ்களில் வெறும் ஒரு அரைசதம் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அவரது டெஸ்ட் சராசரியான 35.27-ஐ விட அவர் சிறந்த பேட்ஸ்மேன்.

அதேபோல, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது சராசரி 34.54ஆக இருப்பதற்கு முக்கிய காரணம், அவர் ஒரே பேட்டிங் வரிசையில் ஆடாதது தான். அவர் தன் முதல் ஆறு போட்டிகளில் மட்டுமே துவக்க வீரராக ஆடினார். அதன் பின், 3, 4, 5, 6 என பல்வேறு இடங்களில் ஆடினார். ஆசிய கோப்பையில் ஒரு போட்டியில் மட்டும் துவக்க வீரராக களமிறங்கினார்.

ஓங்கி அறைந்த அப்ரிடி.. ஸ்பாட் பிக்ஸிங் செய்ததை ஒப்புக் கொண்ட ஆமிர்.. ரசாக் சொன்ன பகீர் ரகசியம்! ஓங்கி அறைந்த அப்ரிடி.. ஸ்பாட் பிக்ஸிங் செய்ததை ஒப்புக் கொண்ட ஆமிர்.. ரசாக் சொன்ன பகீர் ரகசியம்!

தற்போது ஷிகர் தவான் அடுத்த மூன்று வாரங்களுக்கு ஆட முடியாத வகையில் காயமடைந்துள்ளார். அவரது துவக்க இடத்திற்கு ராகுல் மீண்டும் திரும்பியுள்ளார். தற்போது, மிடில் ஆர்டரில் ஆட தன் மனதை டயர் செய்த ராகுல், தற்போது தான் கற்றதை எல்லாம் மறக்க வேண்டும். மீண்டு, டெஸ்ட் துவக்க வீரராக என்ன மனநிலையில் இருப்பாரோ அதற்கே திரும்ப செல்ல வேண்டும்.

மனதையும், சில நுட்பங்களையும் ராகுல் மாற்றி, தன் மதிப்பை அணியிடம் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் ராகுல். ஒருநாள் போட்டிகளில் அதிக அனுபவமில்லாத ராகுல், தன் பேட்டிங் வரிசையை மாற்றி வருவது அத்தனை எளிதல்ல.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி விரைவாக 2 விக்கெட்களை இழந்த போது, கிட்டத்தட்ட துவக்க வீரர் போன்று தான் களமிறங்கினார் ராகுல். அது அவருக்கு ஓரளவு பயிற்சி போல இப்போது உதவலாம்.

ராகுல் மீது அணி நிர்வாகம் எந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தால், அவரை ராகுல் டிராவிட் உடன் ஒப்பிட்டு பேசி இருப்பார் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர். அவர் கூறுகையில், டிராவிட் எப்படி பல்வேறு இடங்களில் பேட்டிங் செய்தாரோ, அதே போல ராகுலும் செய்தால் அது எந்தளவு உதவும் என்பது குறித்து பேசினார்.

ராகுல் தற்போது நியூசிலாந்து அணியின் அதிரடி வேகப் பந்துவீச்சாளர்களான ட்ரென்ட் பவுல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகியோரின் சவாலை எதிர்கொண்டு தன்னை நிரூபிக்க வேண்டும்.

Story first published: Wednesday, June 12, 2019, 23:42 [IST]
Other articles published on Jun 12, 2019
English summary
IND vs NZ Cricket World cup 2019 : KL Rahul once again returned to opening the game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X