ஜடேஜாவை மட்டம் தட்டிய மஞ்ச்ரேக்கர்.. தலை தெறிக்க ஓட விட்ட மைக்கேல் வாகன்! அப்படி என்ன செஞ்சாரு?

World Cup 2019 : Jadeja : ஜடேஜாவை மட்டம் தட்டி பேசிய மஞ்சரேக்கர்..பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!

மான்செஸ்டர் : இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார்.

இது என்னடா ட்விட்டருக்கு வந்த சோதனை? என்பது போல நடந்த இந்த சம்பவத்தை "என் வாழ்க்கை இனி சிறப்பாக இருக்கும்" என மைக்கேல் வாகன் கொண்டாடி இருக்கிறார். இந்த ட்விட்டர் கலவரத்துக்கு முக்கிய காரணம் ஜடேஜா தான்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேச்சு

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேச்சு

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த போது ஜடேஜா ஒரு பகுதி வீரர், முழுமையான வீரர் அல்ல.. அவரை என் அணியில் நான் தேர்வு செய்ய மாட்டேன் என்று மட்டம் தட்டி பேசி இருந்தார். ஆங்கிலத்தில் இதை குறிக்க "bits and pieces player" என கூறி இருந்தார்.

ஜடேஜா பதிலடி

ஜடேஜா பதிலடி

இதைக் கண்டு கோபமடைந்த ஜடேஜா, தான் ஆடியதில் பாதி போட்டிகள் கூட நீங்கள் விளையாடவில்லை. சாதித்துக் கொண்டு இருக்கும் வீரர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தை "டயரியா"வை போதும் என்கிற வரை கேட்டு விட்டேன் என்று பதிலடி கொடுத்தார்.

மைக்கேல் வாகன் கிண்டல்

மைக்கேல் வாகன் கிண்டல்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர். அவர் இந்த விவகாரத்தில் ஜடேஜாவை ஆதரித்தார். மஞ்ச்ரேக்கர் தவறான கருத்து கூறி இருக்கிறார் என்பது குத்திக் காட்டி தொடர்ந்து கிண்டல் செய்தார். ஜடேஜா இந்திய அணியில் இடம் பெற்ற போதும், விக்கெட் எடுத்த போதும், ஜடேஜா என குறிப்பிடாமல் "bits and pieces" என்ற வார்த்தையை பயன்படுத்தி மஞ்ச்ரேக்கரை கிண்டல் செய்தார்.

உச்சகட்ட எரிச்சல்

இதனால் உச்சகட்ட எரிச்சலில் இருந்தார் மஞ்ச்ரேக்கர். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா கடினமான ஆடுகளத்திலும் பந்தை சுழல வைத்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். அதை குறிப்பிட்டு, "பிட்ஸ் அண்ட் பீசஸ் பந்தை ஸ்பின் செய்கிறது" என்று நக்கலடித்தார் வாகன்.

பிளாக் செய்தார்

இடைவிடாத கேலி, கிண்டல் செய்து வந்த மைக்கேல் வாகனை, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன் ட்விட்டர் கணக்கில் பிளாக் செய்தார். அது குறித்த புகைப்படத்தை பகிர்ந்து, அதையும் கிண்டல் செய்தார் மைக்கேல் வாகன்.

ரசிகர்கள் பாராட்டு

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எல்லை மீறி, ஒரு சார்பாக வர்ணனை செய்து வரும் நிலையில், மைக்கேல் வாகன் செய்த இம்சைகளை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மானம் கிரிக்கெட் உலகில் கப்பல் ஏறி இருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs NZ Cricket World cup 2019 : Sanjay Manjrekar blocked Michael Vaughan in twitter
Story first published: Wednesday, July 10, 2019, 14:59 [IST]
Other articles published on Jul 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X