நல்லா ரெஸ்ட் எடுங்க.. நாங்க கிளம்புறோம்! டாட்டா காட்டும் இந்திய அணி.. சீனியர் வீரருக்கு நேர்ந்த கதி!

மீண்டும் மீண்டும் காயம்... தவானுக்கு இனி வாய்ப்பு கிடைக்குமா ?

மும்பை : மூத்த வீரர் ஷிகர் தவானுக்கு அடுத்து இந்தியா பங்கேற்க உள்ள கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைக்காது என தகவல் கிடைத்துள்ளது.

இந்திய அணி அடுத்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் காயமடைந்த தவான், நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம் என்ற மோசமான நிலையும் உள்ளது.

பாதிக்கப்பட்ட தவான்

பாதிக்கப்பட்ட தவான்

ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இலங்கை தொடரில் மிகவும் போராடி தன் பார்மை நிரூபித்தார் தவான். ஆனால், தொடர்ந்து ஏற்படும் காயங்களால் கடந்த ஓராண்டாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

2019 உலகக்கோப்பை தொடரில் அபாரமாக ஆடி வந்த ஷிகர் தவான், இடையே கைவிரலில் காயமடைந்து மீதமுள்ள தொடர்களில் ஆட முடியாமல் விலகினார். அது இந்திய அணிக்கு அப்போது பின்னடைவாக அமைந்தது.

பலத்த காயம்

பலத்த காயம்

பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் பார்ம் இழந்து தவித்தார். அதனால், உள்ளூர் டி20 தொடரில் ஆடிய அவர் முட்டியில் பலத்த காயம் அடைந்து 27 தையல்கள் போட்டு ஓய்வில் இருந்தார்.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

அதனால், சில கிரிக்கெட் தொடர்களில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், மீண்டும் பார்ம் இழந்து தவித்தார். இந்த நிலையில், இலங்கை டி20 தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அரைசதம் அடித்த தவான்

அரைசதம் அடித்த தவான்

ஆஸ்திரேலிய தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய தவான், இரண்டு அரைசதம் அடித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதத்தை வெறும் 4 ரன்களில் தவறவிட்டார்.

தவானின் காயங்கள்

தவானின் காயங்கள்

அந்தப் போட்டியில் அவருக்கு உடலில் பந்து தாக்கியதில் உள்காயம் ஏற்பட்டது. அந்த வலியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடிய அவர், பீல்டிங் செய்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு பாதி போட்டியில் விலகினார். இந்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு பதிலாக சாஹல் தான் பெரும்பாலும் பீல்டிங் செய்தார்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இந்திய அணி அந்தப் போட்டியில் வென்றாலும், காயம் காரணமாக அடுத்து நடக்க உள்ள தொடர்களில் தவான் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடக்க உள்ள நியூசிலாந்து டி20 தொடர் வரும் ஜனவரி 24 அன்று துவங்க உள்ளது.

அணியில் இல்லை

அணியில் இல்லை

அதற்காக இந்திய அணி திங்கள் அன்று பயணம் செய்ய உள்ளது. அதற்குள் அவரது காயம் குணமடையாது என்பதால் அவர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட மாட்டார் என கூறப்படுகிறது.

மாற்று துவக்க வீரர்

மாற்று துவக்க வீரர்

தவான் இல்லாத பட்சத்தில் சிறப்பாக ஆடி வரும் கேஎல் ராகுல் அணியில் துவக்கம் அளிப்பார் என்பதால் இந்திய அணிக்கு எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம், தவான் தொடர்ந்து காயத்தில் சிக்குவது அணி நிர்வாகத்தின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

தவான் நிலை சந்தேகம்

தவான் நிலை சந்தேகம்

இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில், தவான் நிலையில்லாமல் இருப்பது அணியின் திட்டங்களை பாதிக்கும் என்பதால் அவரை இனி அணியில் தேர்வு செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர். அதன் பின் தவான் நிலை குறித்து தெரிய வரும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs NZ : Dhawan may dropped from the T20 squad, following his injury in Australia ODI series.
Story first published: Monday, January 20, 2020, 16:45 [IST]
Other articles published on Jan 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X