For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி

லக்னோ: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி குறைந்த இலக்கை கூட ஏன் போராடி எட்டியது என கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். மைதான ஊழியர்களுக்கு முக்கிய கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்கமே அதிர்ச்சி தான். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ஓப்பனிங் வீரர்கள் ஃபின் ஆலன் ( 11), டெவோன் கான்வே (11) என அடுத்தடுத்து வெளியேறினர்.

தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல் தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

பிட்ச்-ல் அனைவரும் எதிர்பார்த்ததை விட ஏகபோகத்திற்கு டேர்ன் இருந்ததால் ஸ்பின்னர்களுக்கு கையில் லட்டு கொடுத்தது போல் ஆனது. குறிப்பாக ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங் என இரண்டு வேகபந்துவீச்சாளர்களை 18வது ஓவர் வரை பயன்படுத்தவே இல்லை என்ற அளவிற்கு பனி இருந்தது. ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை அடித்தது.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

100 என்ற மிகவும் குறைவான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பேட்ஸ்மேன்களால் பந்தை டைமிங் செய்யவே முடியவில்லை. சுப்மன் கில் (11), இஷான் கிஷான் (19), ராகுல் திரிபாதி (13) என சொற்ப ரன்களுக்கு வெளியேற 70/4 என்ற நிலை இருந்தது. எனினும் கேப்டன் பாண்ட்யா (15), துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் (26) ரன்கள் அடித்து 19.5 ஓவர்களில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

 ஹர்திக் அதிருப்தி

ஹர்திக் அதிருப்தி

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கேப்டன் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்திருந்தார். அதில், ஆட்டத்தை முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது. கடினமான பிட்ச்-களை கண்டு நான் பதற்றமடையவே மாட்டேன். ஆனால் இந்த 2 டி20களும் நடந்த பிட்ச்-கள் அதிர்ச்சியை கொடுக்கின்றன. இவை டி20க்காக செய்யப்பட்ட பிட்ச்-களே கிடையாது.

 முக்கிய கோரிக்கை

முக்கிய கோரிக்கை

பிட்ச்-களை கடைசி நேரத்தில் தயார் செய்தால் இதுபோன்ற சொதப்பல்கள் தான் ஏற்படும். எனவே மைதானத்தில் பிட்ச்-ஐ உருவாக்குவோர் முன்கூட்டியே தயார்படுத்தியிருக்க வேண்டும். 120 ரன்கள் என்பது இங்கு நல்ல ஸ்கோராகும். எதிரணி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யக்கூடாது என்பதில் இந்திய பவுலர்கள் தெளிவுடன் இருந்தனர். எங்களை விட அவர்களுக்கு அதிகம் ஸ்பின் ஆனது. எனினும் நாங்கள் சாதித்துவிட்டோம் என பாண்ட்யா கூறியுள்ளார்.

Story first published: Monday, January 30, 2023, 7:23 [IST]
Other articles published on Jan 30, 2023
English summary
Captain Hardik pandya dissappointment over the pitch condition for India vs new zealand t20 series after won the 2nd T20 match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X