For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது டெஸ்டிலும் இந்தியா தோல்வி.. 3 நாளில் சோலியை முடித்தது நியூசி.. மானத்தை காப்பாற்றிய பும்ரா!

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Recommended Video

IND VS NZ TEST SERIES | Virat Kohli talks about test series loss

முதல் டெஸ்ட் போட்டியிலும் தோற்று இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2 - 0 என முழுமையாக இழந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் ஆறுதல் அளித்தனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டிய நிலையில், உமேஷ் யாதவ் 1, பும்ரா 2 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றி வித்தியாசத்தை குறைத்தனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் களமிறங்கியது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ப்ரித்வி ஷா 54 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். புஜாரா 54, ஹனுமா விஹாரி 55 என அரைசதம் கடந்த உடன் ஆட்டமிழந்தனர். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

முதல் டெஸ்ட் போலவே இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டது. மயங்க் அகர்வால் 7, கோலி 3, ரஹானே 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 242 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

அடுத்து நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. துவக்க வீரர் டாம் லாதம் 52, பிளண்டல் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பவே அந்த அணி 153 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது.

முன்னிலை குறைவு

முன்னிலை குறைவு

பின்வரிசை வீரர் கைல் ஜேமிசன் 49 ரன்கள் சேர்த்து ரன் வித்தியாசத்தை குறைத்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 235 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியால் மிகக் குறைந்த அளவில் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.

இரண்டாவது இன்னிங்க்ஸ்

இரண்டாவது இன்னிங்க்ஸ்

அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. புஜாரா 24 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் அதிகபட்ச ரன்னாக அமைந்தது. கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ப்ரித்வி ஷா 14, ஜடேஜா 16 ரன்கள் சேர்த்தனர்.

132 ரன்கள் வெற்றி இலக்கு

132 ரன்கள் வெற்றி இலக்கு

இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 124 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டாம் லாதம் 52, பிளண்டல் 55 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு மிக அருகே சென்றனர்.

பும்ரா 2 விக்கெட்

பும்ரா 2 விக்கெட்

அப்போது உமேஷ் யாதவ் லாதம் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து பும்ரா, பிளண்டல் மற்றும் கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். 3 விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணி பின் வெற்றி இலக்கை தொட்டது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, இந்த முறையும் அதே போன்ற மோசமான தோல்விக்கு அருகே சென்றது. எனினும், பும்ரா, உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்ததால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடரை இழந்தது

தொடரை இழந்தது

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 0 என தோல்வி அடைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி 120 புள்ளிகள் பெற்று முன்னேறி உள்ளது. இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Story first published: Monday, March 2, 2020, 10:13 [IST]
Other articles published on Mar 2, 2020
English summary
IND vs NZ : India vs New Zealand second test match result - New Zealand beat India by 7 wickets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X