For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்!

வெல்லிங்டன் : டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணி என சில வாரங்கள் முன்பு மார் தட்டிக் கொண்ட இந்திய அணியின் மோசமான ரெக்கார்டு ஒன்றை தோண்டி எடுத்து விளாசி வருகிறார்கள் விமர்சகர்கள்.

Recommended Video

INDvsNZ 1st Test | New Zealand won by 10 wickets | இந்தியாவுக்கு மோசமான தோல்வி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங் மட்டுமில்லாமல், பந்துவீச்சும் மோசமாகவே இருந்தது.

கடைசி 3 விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி தடுமாறியது. பின்வரிசை வீரர்களின் விக்கெட்டை வீழ்த்துவதில் உலகிலேயே இந்தியா தான் மோசமான இடத்தில் உள்ளது.

முதல் டெஸ்ட் பேட்டிங்

முதல் டெஸ்ட் பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமாக சொதப்பினர். ரஹானே மட்டும் 46 ரன்கள் சேர்த்தார். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதல் 7 விக்கெட்கள்

முதல் 7 விக்கெட்கள்

அடுத்து அடிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. மூன்றாம் நாள் துவக்கத்தில் அந்த அணி 225 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது. 100 ரன்கள் முன்னிலை பெறும் முன்பே அந்த அணியை ஆல் - அவுட் செய்யலாம் என கனவு கண்டது இந்திய அணி.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஆனால், கிராண்ட்ஹோம் 43, கைல் ஜேமிசன் 44 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு தலைவலியாக இருந்தனர். அது மட்டுமின்றி, கடைசியாக களமிறங்கிய ட்ரென்ட் பவுல்ட் அதிரடி ஆட்டம் ஆடி 5 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து, 24 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.

கடைசி 3 விக்கெட்கள்

கடைசி 3 விக்கெட்கள்

நியூசிலாந்து அணி கடைசி 3 விக்கெட்களை இழக்கும் முன்பு 123 ரன்கள் சேர்த்து இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் 348 ரன்கள் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 183 ரன்கள் பின்னடைவை சந்தித்து, இந்தப் போட்டியில் தன் வெற்றி வாய்ப்பை வெகுவாக குறைத்துக் கொண்டது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

கோலி தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக வலம் வரும் இந்திய அணி, கடந்த 2018 முதல் எதிரணியின் எட்டாம் வரிசை முதல் 11ஆம் வரிசை வரை உள்ள வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த அதிக பந்துகளை எடுத்துக் கொள்ளும் அணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்த இடங்கள்

அடுத்த இடங்கள்

இந்திய அணி கடைசி 4 பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்த 101 பந்துகளை எடுத்துக் கொள்கிறது. இந்த மோசமான சாதனைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து (92 பந்துகள்), இலங்கை (90 பந்துகள்) உள்ளன. இந்தப் பட்டியலில் பின்வரிசை வீரர்களை வீழ்த்த 100க்கும் அதிகமான பந்துகளை எடுத்துக் கொள்ளும் ஒரே அணியாக இந்தியா விளங்குகிறது.

8 முறை

8 முறை

நியூசிலாந்து முதல் டெஸ்ட் மட்டுமில்லாமல், கடந்த 15 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 8 முறை, பின் வரிசை வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் திணறி இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. சிறந்த பந்துவீச்சை கொண்ட அணி இப்படித் தான் செயல்படுமா? என விமர்சகர்கள் விளாசி வருகிறார்கள்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்தில், நான்கு போட்டிகளில் இந்திய அணி பின்வரிசை வீரர்களை வெளியேற்ற முடியாமல் தடுமாறி உள்ளது. அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற ஒரே போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் தான் அப்படி தடுமாறியது.

மற்ற டெஸ்ட் தொடர்கள்

மற்ற டெஸ்ட் தொடர்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா அதே தடுமாற்றத்தை சந்தித்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 50 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பின் 100 ரன்களை கடந்தது.

தோல்விகளுக்கு காரணம்

தோல்விகளுக்கு காரணம்

இந்திய அணியின் டெஸ்ட் தோல்விகளுக்கு காரணம், இந்தியா பின்வரிசை வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த திணறுவது தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது. முதல் ஆறு, ஏழு விக்கெட்களை வீழ்த்த திட்டமிடும் இந்திய அணி, கடைசி விக்கெட்களை வீழ்த்தவும் திட்டமிட வேண்டும் என கூறுகிறார்கள் விமர்சகர்கள்.

Story first published: Sunday, February 23, 2020, 20:08 [IST]
Other articles published on Feb 23, 2020
English summary
IND vs NZ : Indian team is worst in dismissing tail enders in the whole cricket world. India took 101 balls to dismiss last 4 wickets in test matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X