4 பேர் டக் அவுட்.. 10 ரன்னை கூட தாண்டாத 8 பேர்.. இவங்களை வைச்சுகிட்டு என்ன பண்றது? சிக்கலில் கோலி!

Virat Kohli against the ICC Plan | கோலி எதிர்ப்பை மீறி முடிவெடுக்கும் ஐசிசி

ஹாமில்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் எட்டு பேட்ஸ்மேன்கள் 10 ரன்களை கூட தாண்டவில்லை.

நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனதும் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் யாரை எடுப்பது என்ற குழப்பம் கேப்டன் கோலிக்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக துவக்க வீரர்கள், ஆல்-ரவுண்டர் என இரண்டு இடங்களில் யார், யாரை களமிறக்கலாம் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கம் என்பதால் இந்த தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பாக உள்ளன.

இந்தியா அணிக்கு பின்னடைவு

இந்தியா அணிக்கு பின்னடைவு

இதற்கு முன், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்தது. அந்த வீழ்ச்சியில் இருந்து நேரடியாக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

துவக்க வீரர்கள் யார்?

துவக்க வீரர்கள் யார்?

மேலும், அணியில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், யாரை துவக்க வீரராக களமிறக்கலாம் என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ப்ரித்வி ஷா அல்லது ஷுப்மன் கில் இருவரில் ஒருவர் மட்டுமே அணியில் வாய்ப்பு பெற முடியும் என்ற நிலை உள்ளது.

பயிற்சிப் போட்டி

பயிற்சிப் போட்டி

இந்த நிலையில், பயிற்சிப் போட்டியில் இதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயிற்சிப் போட்டியில் இந்திய அணி படுமோசமாக பேட்டிங் செய்து அதிர்ச்சி அளித்தது. புஜாரா, ஹனுமா விஹாரி மட்டுமே நம்பிக்கை அளித்தனர்.

அதிர்ச்சி துவக்கம்

அதிர்ச்சி துவக்கம்

துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா ரன் எடுக்காமலும், மயங்க் அகர்வால் ஒரு ரன் மட்டுமே எடுத்தும் ஆட்டமிழந்தனர். நான்காம் வரிசையில் இறங்கிய ஷுப்மன் கில் டக் அவுட் ஆனார். துவக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ள மூன்று பேரும் இப்படி அவுட் ஆனது பெரும் அதிர்ச்சி அளித்தது.

கை கொடுத்த ஜோடி

கை கொடுத்த ஜோடி

இந்திய அணி 5 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில், அடுத்து வந்த ரஹானே 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஐந்தாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா, ஹனுமா விஹாரி நிதான ஆட்டம் ஆடி அணியை மீட்டனர். புஜாரா 93, விஹாரி 101 ரன்கள் குவித்தனர்.

சரிந்த பேட்ஸ்மேன்கள்

சரிந்த பேட்ஸ்மேன்கள்

அவர்கள் அவுட் ஆன பின், ரிஷப் பண்ட் 7, சாஹா 0, அஸ்வின் 0, ஜடேஜா 8 என வரிசையாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 263 ரன்களுக்கு இந்தியா ஆல் - அவுட் ஆனது. நான்கு வீரர்கள் டக் அவுட் ஆகி இருந்தனர். மொத்தத்தில் 8 வீரர்கள் 10 ரன்களை தாண்டவில்லை.

சிக்கலில் அணி

சிக்கலில் அணி

இந்த மோசமான முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தால் இந்திய அணியில் யாரை டெஸ்ட் போட்டியில் ஆட வைப்பது என்ற கவலை அதிகரித்துள்ளது. கேப்டன் கோலிக்கு அணித் தேர்வில் பேட்ஸ்மேன்கள் குறித்த தலைவலி அதிகரித்துள்ளது என்பது மட்டும் உண்மை.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

அதே சமயம், இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டது. பும்ரா 11 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஷமி 10 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், சைனி தலா 2 விக்கெட்களும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம்

இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம்

இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்வதை பொறுத்தே டெஸ்ட் தொடரில் களமிறங்கப் போகும் துவக்க வீரர் மற்றும் ஆல்-ரவுண்டர் யார் என்பது தெரிய வரும். நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில் இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs NZ : Indian test batsmen failed to score big in warm up match
Story first published: Saturday, February 15, 2020, 12:18 [IST]
Other articles published on Feb 15, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X