For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?

மும்பை: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷானுக்கு 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.

இதனையடுத்து கடைசி மற்றும் 3வது போட்டி நாளை இந்தூரில் உள்ள மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

இஷானின் சேட்டை

இஷானின் சேட்டை

இந்நிலையில் இந்த தொடரில் இஷான் கிஷானுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியின் போது விக்கெட் கீப்பராக செயல்பட்ட இஷான், டாம் லேதமை பந்து எதுவும் இல்லாமல் ஸ்டம்பிங் செய்து ஏமாற்றினர். இதற்காக நடுவர்களிடம் அப்பீலும் கேட்கப்பட்டு, பின்னர் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவை இதே போல டாம் லேதம் அவுட்டாக்கியிருந்ததால் இஷானும் இது போன்று செய்திருந்தார்.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

ஆனால் காமெடியாக செய்த விஷயம் விணையாகியுள்ளது. ஐசிசியின் ஆர்டிக்கள் 2.15 விதிகளின்படி போலியான விஷயங்களை செய்து அம்பயர்களிடம் ஆதாயம் பெற முயன்றதாக இது எடுத்துக்கொள்ளப்படும். இதற்காக அந்த வீரருக்கு 4 ஒருநாள் போட்டிகள் அல்லது 12 டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும்.

 தண்டனை கிடையாது

தண்டனை கிடையாது

எனினும் இஷான் கிஷானுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது என போட்டியின் தலைமை நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார். கள நடுவர்களான அனில் சௌத்ரி மற்றும் நிதின் மேனன் இருவருமே இஷானுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.

 மிடில் ஆர்டர் வாய்ப்பு

மிடில் ஆர்டர் வாய்ப்பு

வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்திய இஷான் கிஷானுக்கு, நியூசிலாந்து தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் நாளை நடைபெறவுள்ள 3வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இஷான் மீண்டும் ஓப்பனராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 23, 2023, 15:32 [IST]
Other articles published on Jan 23, 2023
English summary
Ishan kishan escapse from the 4 ODI suspension after break the rules in India vs New Zealand 3rd ODI Match, here is the reason behind it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X