தோனி, கபில் தேவ் சாதனை முறியடிப்பு.. தனி ஒருவனாக மிரட்டிய இந்திய வீரர்!

Ind vs NZ 2nd ODI | Ravindra Jadeja Surpasses Dhoni, Kapil Dev

ஆக்லாந்து : இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா கடைசி வரை போராடி அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரது அரைசதம் மிகப் பெரிய சாதனைப் பட்டியலில் அவரை முதல் இடத்தில் அமர வைத்துள்ளது.

ஆம், கபில் தேவம் தோனி மட்டுமே இடம் பெற்ற சாதனைப் பட்டியலில் அவர்களை முந்தி மிரட்டி இருக்கிறார் ஜடேஜா.

ஜடேஜாவால் தப்பிய மானம்.. இந்தியா மோசமான தோல்வி.. தொடரை வென்றது நியூசிலாந்து! #INDvsNZ

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் பல இடங்களில் சறுக்கியது. எனினும், ஜடேஜா இரண்டிலும் சிறந்து விளங்கினார். பேட்டிங்கில் அரைசதம் கடந்தார்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 273 ரன்கள் குவித்தது. துவக்கத்தில் நியூசிலாந்து அணி ரன் குவித்தாலும், மத்திய ஓவர்களில் சுழற் பந்துவீச்சால் இந்திய அணி நியூசிலாந்து விக்கெட்களை அள்ளியது. சாஹல் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். தாக்குர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து, நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். அது தான் மற்ற வீரர்களுக்கு விக்கெட்களாக கிடைத்தது. இந்திய அணி 2 ரன் அவுட்களும் செய்தது.

கடைசி நேர சொதப்பல்

கடைசி நேர சொதப்பல்

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 197 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. எப்படியும் 220 அல்லது 230 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என கருதிய நிலையில், ஜேமிசன், டெய்லர் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது. இந்தியா கடைசியில் பந்துவீச்சில் சொதப்பியது.

பேட்டிங் சுமார்

பேட்டிங் சுமார்

அடுத்து 274 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் சுமார் துவக்கம் அளித்தனர். கோலி, ராகுல், கேதார் ஜாதவ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார்.

ஜடேஜா போராட்டம்

ஜடேஜா போராட்டம்

பின்னர் ரவீந்திர ஜடேஜா, பின்வரிசை வீரர்களுடன் சேர்ந்து தனியாக போராட்டம் நடத்தினார். நவ்தீப் சைனியை சிறப்பாக வழி நடத்தி 45 ரன்கள் வரை அடிக்க வைத்தார் ஜடேஜா. அவரது அனுபவம் மிக சிறப்பாக இளம் வீரர்களை வழி நடத்தியது.

அரைசதம் கடந்தார்

அரைசதம் கடந்தார்

ஜடேஜா 49வது ஓவர் வரை தாக்குப் பிடித்து ஆடினார். 55 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி விக்கெட்டாக சரிந்தார் அவர். அவர் ஆட்டமிழந்த போது, இந்திய அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அரிய சாதனை

அரிய சாதனை

ஜடேஜாவின் இந்த போராட்டத்தால் கிடைத்த அரைசதம் மூலம் அவர் சாதனை படைத்துள்ளார். ஏழாம் வரிசையில் ஜடேஜா இதுவரை 7 அரைசதம் அடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்து அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.

தோனி, கபில் தேவ் சாதனை

தோனி, கபில் தேவ் சாதனை

தோனி மற்றும் கபில் தேவ் இருவரும் இதே ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்து ஆறு அரைசதம் அடித்து உள்ளனர். அவர்களின் சாதனையை முறியடித்து ஜடேஜா ஏழு அரைசதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம், தான் பேட்டிங்கில் பல மடங்கு முன்னேறி இருப்பதையும் ஜடேஜா உணர்த்தி உள்ளார்.

சிறந்த ஆல் - ரவுண்டர்

சிறந்த ஆல் - ரவுண்டர்

ஜடேஜா சுழற் பந்துவீச்சில் கலக்கி வரும் நிலையில், உலகக்கோப்பை தொடர் முதல் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். அதன் அடுத்த கட்டமாகவே இந்த சாதனையை செய்துள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றாலும், ஜடேஜாவின் ஆட்டத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs NZ : Jadeja broke Dhoni and Kapil Dev record in hitting 50’s at the no.7 batting position.
Story first published: Saturday, February 8, 2020, 19:21 [IST]
Other articles published on Feb 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X