For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் கேன் வில்லியம்சன் நீக்கம்.. 4வது டி20யில் இவர் தான் கேப்டன்.. நியூசி. அணி அதிரடி! #INDvsNZ

Recommended Video

IND vs NZ : Kane williamson ruled out of 4th T20| நான்காவது போட்டியில் கேப்டன் வில்லியம்சன் நீக்கம்

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நான்காவது டி20 போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுதி நியூசிலாந்து அணியை வழிநடத்த உள்ளார்.

மூன்றாவது டி20 போட்டியில் பீல்டிங் செய்த போது கேன் வில்லியம்சன் காயம் அடைந்தார். அதன் காரணமாக அவர் இந்தப் போட்டியில் நீக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

கேன் வில்லியம்சன் அபாரம்

கேன் வில்லியம்சன் அபாரம்

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், மற்ற வீரர்கள் கை விட்டதால் அந்த இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைந்தது.

வில்லியம்சன் நீக்கம்

வில்லியம்சன் நீக்கம்

இந்த நிலையில், நான்காவது டி20 போட்டிக்கு முன் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ள செய்தி வெளியானது. அவருக்கு பதில் டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். மூன்றாவது போட்டியில் பீல்டிங் செய்த போது அவர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

95 ரன்கள் குவித்தார்

95 ரன்கள் குவித்தார்

கேன் வில்லியம்சன் மூன்றாவது டி20 போட்டியில் அவர் 95 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில் பீல்டிங் செய்த போது அவர் தோள்பட்டையில் காயம் அடைந்துள்ளார். அந்த காயத்துடன் அவர் பின்னர் பேட்டிங் செய்து 95 ரன்கள் குவித்தார்.

கேப்டன் டிம் சவுதி

கேப்டன் டிம் சவுதி

அனுபவ வீரரான டிம் சவுதி கேன் வில்லியம்சன் அணியில் இடம் பெறாத போது நியூசிலாந்து அணியை வழி நடத்திய அனுபவம் கொண்டவர். அவர் இந்தப் போட்டியில் மட்டும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்தது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

கேன் வில்லியம்சனுக்கு பதில் டாம் ப்ரூஸ் அணியில் சேர்க்கப்பட்டார். முதல் மூன்று டி2௦ போட்டிகளிலும் சரியாக ரன் குவிக்காமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வந்த கோலின் டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் டேரில் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டார்.

மீண்டும் பங்கேற்பார்

மீண்டும் பங்கேற்பார்

ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டியில் கேன் வில்லியம்சன் காயம் குணமாகி மீண்டும் அணியில் பங்கேற்பார் என்றும் நியூசிலாந்து அணி நிர்வாகம் தன் ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதனால் அவரது காயம் பெரிதாக இருக்காது என கருதப்படுகிறது.

இந்திய அணி மாற்றம்

இந்திய அணி மாற்றம்

நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. துவக்க வீரர் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் அணியில் வாய்ப்பு பெற்றார். முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது.

சஞ்சு சாம்சன் வாய்ப்பு

சஞ்சு சாம்சன் வாய்ப்பு

முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அணியில் வாய்ப்பு பெற்றனர். சஞ்சு சாம்சன் நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் அணியில் ஆட வாய்ப்பு பெற்றுள்ளார். இது அவரின் மூன்றாவது சர்வதேச டி20 போட்டி ஆகும்.

Story first published: Friday, January 31, 2020, 13:17 [IST]
Other articles published on Jan 31, 2020
English summary
IND vs NZ : Kane williamson ruled out of 4th T20 due to soulder injury. Tim Southee will lead New Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X