For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜா சொல்லியும் கேட்காத கேப்டன்.. மெகா சொதப்பல்.. கடுப்பான ரசிகர்கள்!

Recommended Video

Ind vs NZ 2nd ODI | Ravindra Jadeja Surpasses Dhoni, Kapil Dev

ஆக்லாந்து : இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா பந்துவீச்சில் ஒரு விக்கெட் வாய்ப்பு கிடைத்து, பின் கோலியின் சொதப்பலால் பறிபோனது.

ஜடேஜா எல்பிடபுள்யூ அவுட் கேட்டு, அம்பயர் மறுத்த நிலையில், அதற்கு ரிவ்யூ கேட்டு இருந்தால் இந்தியா எளிதாக ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கும்.

எனினும், கேப்டன் கோலி முடிவு காரணமாக இந்திய அணி விக்கெட் வாய்ப்பை கோட்டை விட்டது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. ஆடுகளம் சேஸிங் செய்ய சாதகமாக இருக்கும் என்ற நிலையில் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர்கள் அபாரம்

துவக்க வீரர்கள் அபாரம்

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள், மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் அந்த அணிக்கு அபார துவக்கம் அளித்தனர். நிக்கோல்ஸ் நிதான ஆட்டம் ஆட, கப்தில் அதிரடியாக ரன் சேர்த்தார். அதனால், நியூசிலாந்து அணி வேகமாக ரன் குவித்து வந்தது.

அரைசதம்

அரைசதம்

ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் டாம் பிளண்டல், கப்தில் ஜோடி ஆடத் துவங்கியது. மார்ட்டின் கப்தில் அரைசதம் கடந்து ஆடி வந்தார். அப்போது 22வது ஓவரை ஜடேஜா வீசினார்.

அவுட் கேட்ட ஜடேஜா

அவுட் கேட்ட ஜடேஜா

அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த மார்ட்டின் கப்தில் பந்தை தவறவிட்டார். ஆனால், நேரலையில் பந்து அவரது பேட்டில் எட்ஜ் ஆவது போல இருந்தாலும், பந்து அவரது காலில் படுவது போலவும் இருந்தது. அதனால், எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டார் ஜடேஜா.

அம்பயர் மறுப்பு

அம்பயர் மறுப்பு

ஆனால், பந்து பேட்டில் படுவதாக கருதிய அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். பந்து காலில் படுவதாக எண்ணிய ஜடேஜா கேப்டன் கோலியிடம் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்கலாம் எனக் கூறினார். விக்கெட் கீப்பர் ராகுலும் ரிவ்யூ கேட்கலாம் என கூறினார்.

ரீப்ளே

ரீப்ளே

ஆனாலும், கேப்டன் விராட் கோலி ரிவ்யூ கேட்க மறுத்து விட்டார். ஆனால், சில பந்துகளுக்கு பின் அந்த பந்தின் ரீப்ளே காட்டப்பட்டது. அதில் பந்து கப்தில் காலில் படுவது தெளிவாக தெரிந்தது. அது மட்டுமின்றி, பந்து, ஸ்டம்புகளை தகர்ப்பதும் தெரிய வந்தது.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

ஒருவேளை கேப்டன் கோலி டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டு இருந்தால் கப்தில் 60 ரன்களில் ஆட்டமிழந்து இருப்பார். ஆனால், கப்தில் 79 ரன்கள் சேர்த்த பின் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், ரிவ்யூ கேட்பதில் இருக்கும் குழப்பத்தை இந்த சம்பவம் வெளிக் காட்டியது.

தோனி ஒப்பீடு

தோனி ஒப்பீடு

தோனி இந்திய அணியில் இருந்த வரை டிஆர்எஸ் முடிவுகள் துல்லியமாக இருந்தது. தோனி சொன்னால் உடனே ரிவ்யூ கேட்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், அவர் இல்லாத நிலையில், இந்திய அணி ரிவ்யூ கேட்பதில் தவறுகளை செய்து வருகிறது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் ராகுல் சொன்ன பிறகும் கேப்டன் கோலி ரிவ்யூ கேட்காமல் விக்கெட் வாய்ப்பை நழுவ விட்டதை ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் வருகிறார்கள். சிலர் தோனியுடன் ஒப்பிட்டும் வருகின்றனர்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

இந்தப் போட்டியில் துவக்கத்தில் இந்திய அணி விக்கெட் எடுக்க தடுமாறினாலும், மத்திய ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்தியது. கப்தில், நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர் மட்டுமே தாக்குப் பிடித்து ரன் குவித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

Story first published: Saturday, February 8, 2020, 11:32 [IST]
Other articles published on Feb 8, 2020
English summary
IND vs NZ : Kohli missed a DRS wicket chance despite Jadeja pointed out it. Fans are not happy with it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X