25 பந்தில் 51 ரன்.. இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி.. வெறியாட்டம் ஆடிய 2 நியூசி. வீரர்கள்.. செம பதிலடி!

ஆக்லாந்து : இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அதிரடி வீரர் ராஸ் டெய்லர் இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர்.

இருவரும் சரியாக 25 பந்தில் தங்கள் அரைசதம் கடந்து 51 ரன்களை எட்டினர். அவர்களின் அதிரடியால் இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

ரன் மழை

ரன் மழை

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நீண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் ரன் மழை பொழியும் என கருதப்பட்டது.

சிறிய மைதானம்

சிறிய மைதானம்

காரணம், போட்டி நடந்த ஆக்லாந்து மைதானம் சிறிய மைதானம் என்பதால் பவுண்டரிகளை எளிதாக அடிக்கலாம். பிட்ச்சும் பேட்டிங் செய்ய ஏற்றதாக இருந்தது. அதனால், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில், கோலின் மன்றோ அதிரடி ஆட்டம் ஆடினர். மார்ட்டின் கப்தில் 19 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மன்றோ - கேன் வில்லியம்சன் இணைந்தனர்.

மரண அடி

மரண அடி

கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடுபவர் என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், அவர் இந்தப் போட்டியில் மரண அடி அடித்தார். நான்கு சிக்ஸர்கள், நான்கு ஃபோர் அடித்த அவர் 25 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். பின் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

கோலின் மன்றோ அபாரம்

கோலின் மன்றோ அபாரம்

கோலின் மன்றோ 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் கிராண்ட்ஹோம் 0, செய்பர்ட் 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். எனினும், அதிரடி வீரர் ராஸ் டெய்லர் மின்னல் வேகத்தில் அடித்து ஆடினார்.

இருவரும் அரைசதம்

இருவரும் அரைசதம்

அவர் 25 பந்துகளில் 51 ரன்களை எட்டி அரைசதம் கடந்தார். வில்லியம்சனும், டெய்லரும் 25 பந்துகளில் 51 ரன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது. டெய்லர் 57 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.

விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி

விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 203 ரன்கள் குவித்து இருந்தது. இது டி20 போட்டிகளில் பெரிய இலக்கு என்றாலும், ஆக்லாந்து மைதானத்தில் எட்டக் கூடிய இலக்குதான். வில்லியம்சன், டெய்லர் இருவரும் தங்கள் மீதான விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

டெய்லர் தடுமாற்றம்

டெய்லர் தடுமாற்றம்

ராஸ் டெய்லர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச டி20 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். தன் துவக்க காலத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஸ் டெய்லர் சமீப காலங்களில் சில போட்டிகளில் ரன் குவிப்பதும், சில போட்டிகளில் சொற்ப ரன்கள் எடுப்பதுமாக இருக்கிறார்.

மிரட்டிய டெய்லர்

மிரட்டிய டெய்லர்

இந்த நிலையில், டி20 போட்டிகளில் மீண்டும் தன் பழைய ஆட்டத்தை கண்முன் காட்டி அசத்தினார். 25 பந்துகளில் அரைசதம் எட்டி மிரட்டினார். அதே போல, கேன் வில்லியம்சனும் தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டி20 ஆட்டம்

டி20 ஆட்டம்

சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக அறியப்படும் கேன் வில்லியம்சன் நிதான ஆட்டம் ஆடுபவர் என்பதால், அவர் டி20 போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என்ற பேச்சு இருந்தது. அதை உடைத்த அவர் 25 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs NZ : NZ players Ross Taylor and Kane Williamson hit 51 runs out of 25 balls. Both of them answered their critics.
Story first published: Friday, January 24, 2020, 16:10 [IST]
Other articles published on Jan 24, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X