For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எகிறி குதித்து.. ஒற்றைக் கையில்.. நம்பவே முடியாத கேட்ச்.. வாயை பிளக்க வைத்த ஜடேஜா!

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பிடித்த கேட்ச் கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ளது.

Recommended Video

IND VS NZ 2ND TEST | Ravindra Jadeja takes a catch of Neil Wagner

ஜடேஜா சிறந்த பீல்டர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவர் இதற்கு முன் பல அற்புதமான கேட்ச்களை பிடித்து இருந்தாலும், அவை அனைத்தையும் விட இந்த கேட்ச் நம்ப முடியாத ஒன்றாக அமைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டும், பேட்டிங்கில் கை கொடுக்கவில்லை என்ற காரணத்தால், அஸ்வின் இரண்டாவது போட்டியில் அணியில் சேர்க்கப்படவில்லை.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு

ஜடேஜாவுக்கு வாய்ப்பு

பேட்டிங்கிலும் சமீப காலங்களில் சிறப்பாக ஆடி வரும் ஜடேஜா இரண்டாவது டெஸ்டுக்கான அணியில் சேர்க்கப்பட்டார். அஸ்வினை நீக்கியதை சிலர் விமர்சனம் செய்தாலும் ஜடேஜா இந்தப் போட்டியில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

பேட்டிங்கில் கைவிட்டார்

பேட்டிங்கில் கைவிட்டார்

முதலில் இந்தியா பேட்டிங் செய்த போது பின்வரிசை வீரர்களுடன் இணைந்து ரன் குவிக்க வேண்டிய நிலையில், அவர் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரது பேட்டிங் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

பவுலிங் எப்படி?

பவுலிங் எப்படி?

எனினும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார் ஜடேஜா. 10 ஓவர்கள் மட்டுமே பந்து வீசும் வாய்ப்பை பெற்ற அவர், அதில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் சாய்த்தார். ராஸ் டெய்லர், கிராண்ட்ஹோம் என இரண்டு பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தி உதவினார்.

ஷமி வீசிய அந்த பந்து

ஷமி வீசிய அந்த பந்து

நெய்ல் வாக்னர் - ஜேமிசன் பேட்டிங் செய்து வந்த போது, ஷமி 72வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை வாக்னர் சந்தித்தார். 8 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், வாக்னர் அடித்து ஆட முற்பட்டார். பந்தை தூக்கி சிக்ஸ் அடிக்க முயன்றார்.

அந்த கேட்ச்

பந்து பறந்து சென்ற போது, பவுண்டரி எல்லையில் இருந்து பல அடி தூரம் உள்ளே நின்று இருந்த ஜடேஜா எகிறி குதித்து, ஒற்றைக் கையில் பந்தை கேட்ச் பிடித்தார். இதை வேறு எந்த வீரரும் கேட்ச் பிடிக்க முயற்சி செய்து இருக்க மாட்டார்கள்.

மிரண்ட ரசிகர்கள்

ஆனால், ஜடேஜா கேட்ச் பிடிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றார். எந்த இடத்திலும் அவர் தடுமாறாமல் இந்த கேட்ச்சை பிடித்தது வியப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இந்த கேட்ச்சை குறித்து வியந்து, பாராட்டி இணையத்தில் கருத்து கூறி வருகின்றனர்.

இந்தியா சறுக்கல்

நியூசிலாந்து அணியை 235 ரன்களுக்கு வீழ்த்திய இந்திய அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கடினமே!

Story first published: Sunday, March 1, 2020, 14:56 [IST]
Other articles published on Mar 1, 2020
English summary
IND vs NZ : Ravindra Jadeja got an unbelievable catch. He jumped and caught the ball one handed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X