For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 8 ரன் இல்லைனா பெரிய அவமானம் ஆகி இருக்கும்.. இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய இளம் வீரர்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்னிங்க்ஸ் தோல்வி அடைய இருந்த இந்திய அணியை நூலிழையில் காப்பாற்றி இருக்கிறார் இளம் வீரர் ரிஷப் பண்ட்.

Recommended Video

IND VS NZ 1ST TEST | Rishabh Pant saved India from innings defeat

இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவும் மோசமான தோல்வி தான் என்றாலும், இன்னிங்க்ஸ் தோல்வி என்பது இந்திய அணிக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்திருக்கும்.

இரண்டாம் இன்னிங்க்ஸில் இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து சில பவுண்டரிகள் அடித்து, இன்னிங்க்ஸ் தோல்வியை தவிர்க்கச் செய்தார் ரிஷப் பண்ட்.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது. அப்போதே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் மயங்க் அகர்வால் 34, ரஹானே 46 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது. மற்ற வீரர்கள் கை விட்டதால் இந்திய அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அபார ஆட்டம்

நியூசிலாந்து அபார ஆட்டம்

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன் குவித்தது. கேன் வில்லியம்சன் 89, ராஸ் டெய்லர் 44, டாம் பிளண்டல் 30, கிராண்ட்ஹோம் 43, கைல் ஜேமிசன் 44, ட்ரென்ட் பவுல்ட் 38 என டாப் ஆர்டர் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரை ரன் குவித்தனர்.

இந்தியா பின்னடைவு

இந்தியா பின்னடைவு

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 348 ரன்கள் குவித்தது. இந்திய அணியை விட 183 ரன்கள் அதிகம் சேர்த்து அந்த அணி முன்னிலை பெற்றது. ஏற்கனவே, பேட்டிங் செய்ய திணறி வந்த இந்திய அணிக்கு இது பெரும் சவாலாக அமைந்தது.

அகர்வால் அரைசதம்

அகர்வால் அரைசதம்

இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தது மட்டுமே ஆறுதலாக அமைந்தது. அவர் 58 ரன்கள் சேர்த்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 144 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து இருந்தது.

நான்காம் நாள் ஆட்டம்

நான்காம் நாள் ஆட்டம்

இன்னிங்க்ஸ் தோல்வியை தவிர்க்க 39 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி விரைவாக விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. 162 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. இன்னும் 21 ரன்களுக்கும் மேல் எடுத்தால் மட்டுமே இந்திய அணி 183 ரன்களை கடக்க முடியும் என்ற நிலை இருந்தது.

ரிஷப் பண்ட் ஆட்டம்

ரிஷப் பண்ட் ஆட்டம்

அப்போது களத்தில் இருந்த ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மாவுடன் இணைந்து சில பவுண்டரிகளை விளாசினார். இதையடுத்து இந்திய அணி 191 ரன்களை எட்டியது. அப்போது பண்ட் மற்றும் பும்ரா ஆட்டமிழக்க இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

இன்னிங்க்ஸ் தோல்வி தவிர்ப்பு

இன்னிங்க்ஸ் தோல்வி தவிர்ப்பு

நியூசிலாந்துஅணியின் முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோரை விட 8 ரன்கள் சேர்த்து, நியூசிலாந்து அணிக்கு 9 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. நியூசிலாந்து அணி 1.4 ஓவர்களில் எளிதாக இலக்கை எட்டி, 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பண்ட் எடுத்த ரன்கள்

பண்ட் எடுத்த ரன்கள்

ரிஷப் பண்ட் 25 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் இன்னிங்க்ஸ் தோல்வியை தவிர்க்கச் செய்தார். அவர் குறைவான ரன்களே எடுத்தாலும், அது இந்திய அணியை அவமானத்தில் இருந்து காப்பாற்றியது. இஷாந்த் சர்மா எடுத்த 12 ரன்களும் அணிக்கு உதவியது.

கடைசி இன்னிங்க்ஸ் தோல்வி

கடைசி இன்னிங்க்ஸ் தோல்வி

இந்திய அணி இதற்கு முன், 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பின், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இன்னிங்க்ஸ் வெற்றிகள் பெற்ற இந்திய அணி, இன்னிங்க்ஸ் தோல்வி அடைவதில் இருந்து 8 ரன்கள் மூலம் தப்பித்தது.

Story first published: Monday, February 24, 2020, 13:36 [IST]
Other articles published on Feb 24, 2020
English summary
IND vs NZ : Rishabh Pant saved India from Innings defeat in first test against New Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X