For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பழசெல்லாம் மறந்து போச்சா? பும்ராவை விமர்சனம் செய்யும் கும்பலை வெளுத்து வாங்கிய மூத்த இந்திய வீரர்!

ஹாமில்டன் : பும்ரா பார்ம் அவுட் ஆகி விட்டதாக நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு பின் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பும்ராவை விமர்சிப்பவர்களை, விமர்சிக்க பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்வது எளிது என சரமாரியாக தாக்கிப் பேசி இருக்கிறார் மூத்த வீரர் முகமது ஷமி.

பும்ரா கடந்த காலத்தில் பல போட்டிகளை வென்று கொடுத்தது எல்லாம் மறந்து விட்டதா? என கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறார் ஷமி.

பும்ரா காயம்

பும்ரா காயம்

பும்ரா கடந்த ஆண்டு முதுகில் காயம் அடைந்தார். முதுகில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி அதற்காக சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டார். பின் நீண்ட காலம் கழித்து இந்திய அணிக்கு திரும்பினார்.

சில போட்டிகளில் தடுமாற்றம்

சில போட்டிகளில் தடுமாற்றம்

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பும்ரா தன் பந்துவீச்சில் முந்தைய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறினார். சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினாலும், சில போட்டிகளில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார்.

விக்கெட் எடுக்காத பும்ரா

விக்கெட் எடுக்காத பும்ரா

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற பும்ரா, மூன்று போட்டிகளிலும் அதிக ரன்கள் கொடுத்ததுடன், அவரால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

நியூசிலாந்து ஒருநாள் தொடர்

நியூசிலாந்து ஒருநாள் தொடர்

அந்த தொடரின் இந்திய அணி மூன்று போட்டிகளையும் தோற்று இருந்தது. தொடரை 3 - 0 என இழந்து கடும் அதிர்ச்சி அளித்தது. இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு பும்ரா முக்கிய காரணம் என பலரால் கூறப்பட்டது.

பார்ம் அவுட் விமர்சனம்

பார்ம் அவுட் விமர்சனம்

பும்ரா முன்பு போல பந்து வீசவில்லை. அவர் பார்ம் அவுட் ஆகி விட்டார் என பலரும் கூறினர். காயத்திற்கு முன் பும்ரா உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், அவரது பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் எளிதாக தாக்கி விளையாடியதை பலரும் சுட்டிக் காட்டினர்.

திருப்பி அடித்த ஷமி

திருப்பி அடித்த ஷமி

இந்த நிலையில், சக வேகப் பந்துவீச்சாளர் ஷமி, பும்ரா குறித்து சகட்டு மேனிக்கு பேசி வரும் விமர்சகர்களை கடுமையாக தாக்கி பதிலடி கொடுத்துள்ளார். அவர் முன்பு இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக் கொடுத்ததை நினைவு கூர்ந்து, பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்யும் வேலை செய்பவர்கள் என விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சந்தேகப்பட முடியாது

சந்தேகப்பட முடியாது

பும்ரா வெறும் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதால் அவரது வெற்றி கொள்ளும் திறமையை சந்தேகப்பட முடியாது. 2 - 4 போட்டிகளுக்கு பின் பேசப்பட வேண்டிய விஷயம் இது அல்ல என்றும் பும்ரா மீதான விமர்சனம் சரியல்ல என கூறி உள்ளார் ஷமி.

எப்படி அதை மறப்பீர்கள்?

எப்படி அதை மறப்பீர்கள்?

மேலும், பும்ரா இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய நிலையில் அதை எப்படி தவிர்ப்பீர்கள் அல்லது மறப்பீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார் ஷமி. வீரர்கள் நேர்மறையாக சிந்திப்பது தான் அவருக்கும், அவரது மன உறுதிக்கும் நல்லது எனவும் கூறி உள்ளார்.

விமர்சனம் செய்ய பணம்

விமர்சனம் செய்ய பணம்

வெளியில் இருந்து பார்க்கும் போது, பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் மிக எளிதாக தேர்வு செய்து தாக்கலாம். அனைத்து விளையாட்டு வீரருக்கும் காயம் ஏற்படும். அப்போது வீரர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்க வேண்டும். மோசமான விஷயங்களை பார்க்கக் கூடாது என்றார்.

ஷமி பந்துவீச்சு

ஷமி பந்துவீச்சு

டெஸ்ட் தொடருக்கு முந்தைய பயிற்சிப் போட்டியில் ஷமி, பும்ரா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். ஷமி 3 விக்கெட்களும், பும்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். டெஸ்ட் தொடரில் பும்ரா மீண்டு வருவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

Story first published: Saturday, February 15, 2020, 20:24 [IST]
Other articles published on Feb 15, 2020
English summary
IND vs NZ : Mohammed Shami slams people who criticizes Jasprit Bumrah form out
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X