For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெறும் 3 ரன் எடுத்து அவுட் ஆகிவிட்டு கோலி செய்த அந்த காரியம்.. கடுப்பில் கொந்தளித்த ரசிகர்கள்!

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி வெறும் 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

Recommended Video

INDvsNZ 2nd Test|இரண்டாவது போட்டியிலும் இந்தியா சொதப்பல்

அவர் ஆட்டமிழந்தது ஒருபுறம் என்றால், அடுத்து அவர் ஒரு ரிவ்யூவை வீணடித்தார். அதைக் கண்ட ரசிகர்கள் இணையத்தில் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

கோலியின் சமீபத்திய பேட்டிங் பார்ம் பாதாளத்தில் இருப்பதோடு, அவரது ரிவ்யூ கேட்கும் திறனும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

முதல் டெஸ்ட் தோல்வி

முதல் டெஸ்ட் தோல்வி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்திதி இருந்தது. பேட்டிங்கில் சொதப்பிய வீரர்கள், இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடி அணியைக் காப்பாற்றுவார்களா? என்ற கேள்வியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த துவக்க வீரர் மயங்க் அகர்வால் இந்தப் போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ப்ரித்வி ஷா அரைசதம்

ப்ரித்வி ஷா அரைசதம்

அதே சமயம், கடந்த போட்டியில் ஏமாற்றிய ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடினார். 61 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றி வரும் கோலி, இந்த போட்டியில் விமர்சனங்களுக்கு பதிலடி எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த முறை 15 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரிவ்யூ வீணடித்தார்

ரிவ்யூ வீணடித்தார்

டிம் சவுதி பந்துவீச்சில் நேராக வந்த பந்தை அடிக்காமல் விட்டு, எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்த அவர், ஒரு நொடி இருக்கும் முன் ரிவ்யூ கேட்டார். அது மிக மோசமான ரிவ்யூவாக அமைந்தது. ரிவ்யூவிலும் அவர் அவுட் தான் என முடிவு கிடைத்தது. இந்தியா ஒரு ரிவ்யூவை இழந்தது.

10 இன்னிங்க்ஸில் எடுத்த ரன்

10 இன்னிங்க்ஸில் எடுத்த ரன்

கோலி இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 10 இன்னிங்க்ஸில் 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் ஒரே ஒரு அரைசதம் அடங்கும். டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்க்ஸில் 2, 19, 3 என சொற்ப ரன்களே எடுத்துள்ளார் கோலி.

ரிவ்யூ செயல்பாடுகள்

ரிவ்யூ செயல்பாடுகள்

கடந்த 2016 முதல் டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேனாக கோலி 14 ரிவ்யூ கேட்டுள்ளார். அதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளார். 9 முறை தவறான ரிவ்யூவாக சென்றது. மூன்று முறை அம்பயர் முடிவுக்கே விடப்பட்டது.

கோபத்தில் ரசிகர்கள்

3 ரன்னில் அவுட் ஆனதோடு ரிவ்யூ கேட்பதிலும் கோலியின் செயல்பாடுகள் படுமோசமாக அமைந்தது. இதைக் கண்ட ரசிகர்கள் இணையத்தில் பொங்கி வருகின்றனர். சிலர் கோலிக்கு அதிகப்படியாக பில்டப் கொடுக்கப்பட்டு விட்டது எனவும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மூன்று அரைசதம்

மூன்று அரைசதம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, மயங்க் அகர்வால் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், துவக்க வீரர் ப்ரித்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி அரைசதம் கடந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 200 ரன்களை கடந்தது.

Story first published: Saturday, February 29, 2020, 12:05 [IST]
Other articles published on Feb 29, 2020
English summary
IND vs NZ : Virat Kohli gone for 3 and wasted a review. Fans are fuming after he wasted a DRS call, which looks like a dead plumb.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X