For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா தான் ஜெயிக்கும்.. பாகிஸ்தான் வீக்னஸ்-ஐ சொன்ன இம்ரான் கான்.. பாக். ரசிகர்கள் அதிர்ச்சி!

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறி இருக்கிறார்.

தன் அறிவுரையில், தன் "நண்பர்" கவாஸ்கரின் கருத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் அணி தோல்வி பயத்தை கைவிட வேண்டும் என்றும் கூறி தங்கள் அணி பலவீனமாக இருப்பதை, இம்ரான் கானே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அவர் கூறிய அறிவுரை இது தான் -

கவாஸ்கர் கருத்து

நான் கிரிக்கெட் ஆடத் துவங்கிய போது 70% திறமை, 30% மன உறுதி இருந்தால் வெற்றி பெறலாம் என நினைத்தேன். நான் கிரிக்கெட் ஆடி முடித்த காலத்தில், இது இரண்டும் 50% - 50% இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால்ம இப்போது நான் என் நண்பர் கவாஸ்கர் சொன்ன 60% மன உறுதி, 40% திறமை தேவை என்று கூறியதை ஒப்புக் கொள்கிறேன்.

சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி

மன அழுத்தம்

மன அழுத்தம்

இன்றைய போட்டியின் பரபரப்பை வைத்துப் பார்க்கும் போது, இரு அணிகளும் அதிக மன அழுத்தத்தில் இருப்பார்கள். மனதின் சக்தி தான் இன்றைய போட்டியின் முடிவில் தெரியும்.

உறுதியான

நாம் சர்பராஸ் என்ற வலுவான கேப்டனை பெற கொடுத்து வைத்துள்ளோம். இன்று அவர் தன் சிறந்த திறனை வெளிக்காட்ட வேண்டும்.

தோல்வி பயம்

தோல்வி பயத்தை எல்லாம் மனதில் இருந்து அழித்து விட வேண்டும். ஏனெனில், மனது ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை தான் சிந்திக்கும். தோல்வி பயம் எதிர்மறை மற்றும் தடுப்பாட்டம் ஆட வைக்கும். எதிரணி செய்யும் தவறுகளையும் அது தவற விட்டு விடும்.

டாஸ் வென்றால்…

எனவே, இது தான் சர்பராஸ் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு என் அறிவுரை - வெற்றி பெற அதிரடி திட்டம் தேவை என்பதால், சர்பராஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நிபுணர்களை அணியில் வைத்துக் கொள்ள வேண்டும். பகுதி நேர வீரர்கள் அழுத்தத்தில் சரியாக செயல்பட மாட்டார்கள். பிட்ச் ஈரமாக இல்லாத பட்சத்தில் சர்பராஸ் டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும்.

இந்தியா தான் வெல்லும்..

இறுதியாக, இந்தியாவுக்கு தான் வாய்ப்பு அதிகம் என்றாலும், தோல்வி பயத்தை அழித்து விடுங்கள். கடைசி பந்து வரை போராடுங்கள். என்ன முடிவு வந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள். தேசத்தின் வேண்டுதல்கள் உங்களோடு இருக்கும். வாழ்த்துக்கள்!

அதிர்ச்சி

அதிர்ச்சி

இப்படி கூறி இருக்கிறார் இம்ரான் கான். பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அவருக்கே இல்லை என்பது அவரது அறிவுரையில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. இதைக் கண்டு பாகிஸ்தான் ரசிகர்களே ஷாக் ஆகி உள்ளனர். சிலர் அவர் உண்மையைத் தானே சொல்றாரு.. என சமாதானம் கூறி உள்ளனர்.

Story first published: Sunday, June 16, 2019, 15:15 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Imran Khan advice to Pakistan team ahead of India clash
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X