இந்தியா போட்டிக்கு முன் இரவு 2 மணி.. ஒரே புகைமூட்டம்.. ஷோயப் மாலிக் செய்த காரியம்.. பகீர் தகவல்!

WORLD CUP IND VS PAK | இந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது!

மான்செஸ்டர் : இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் இரவில் ஷோயப் மாலிக் மற்றும் சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்த காரியம் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

படுதோல்வி

படுதோல்வி

பாகிஸ்தான் அணி நிறைய தவறுகள் செய்தது. பீல்டிங் படு மோசமாக இருந்தது. பந்துவீச்சு மொத்தமாக கவிழ்ந்தது. 337 ரன்களை எப்படி சேஸ் செய்வது என்ற திட்டமே இல்லாமல் சேஸிங் செய்தது பாகிஸ்தான்.

மாலிக் டக் அவுட்

மாலிக் டக் அவுட்

ஷோயப் மாலிக் இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனார். அவர் தான் தற்போதைய பாகிஸ்தான் அணியின் மூத்த அனுபவ வீரர். அவர் டக் அவுட் ஆனது பாகிஸ்தான் அணியை பெரிய அளவில் பாதித்தது. பாகிஸ்தான் ரசிகர்கள் அவர் மீதும் , பாகிஸ்தான் அணி மீதும் கோபத்தில் இருந்தனர்.

இரவு 2 மணி

இரவு 2 மணி

இப்படி பாகிஸ்தான் அணி மோசமாக ஆடியது அந்த நாட்டு ரசிகர்களை கோபமடையச் செய்த நிலையில், போட்டிக்கு முந்தைய நாள் இரவு 2 மணி அளவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலரும், ஷோயப் மாலிக் மற்றும் அவரது மனைவி சானியா மிர்சா உள்ளிட்டோர் ஒரு உணவகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

புகைமூட்டம்

புகைமூட்டம்

சில பாகிஸ்தான் வீரர்கள் ஷீசா என்ற போதை வஸ்து ஒன்றை புகைத்துக் கொண்டு இருந்ததாகவும், நடுவே பாட்டில்களும், கோப்பைகளும் இருந்ததையும் ஒருவர் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் இணையத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஒரே புகை மூட்டமாக இருந்தது.

கடும் கோபம்

கடும் கோபம்

இதைக் கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். மது அருந்துவதோ, புகை பிடிப்பதோ தனிப்பட்ட முறையில் தவறில்லை. ஆனால், முக்கியமான போட்டிக்கு முன், பயிற்சி மற்றும் திட்டமிடல்களில் ஈடுபடாமல், அதுவும் பின்னிரவு 2 மணிக்கு, இப்படி செய்வது சரியா? என்பதே பலரின் கோபத்திற்கு காரணமாக இருந்தது.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில், அந்த வீடியோவிற்கு எதிராக பதிலடி கொடுத்துள்ளார் சானியா மிர்சா. பாகிஸ்தான் அணி முந்தைய போட்டியில் தோல்வி அடைந்த பின் அதில் இருந்து மீள்வதற்காக உணவகத்துக்கு சென்றதாக கூறி உள்ளார். மேலும், குழந்தைகள் எல்லாம் இருக்கும் போது, எங்கள் அனுமதி இல்லாமல் இப்படி வீடியோ எடுத்தது தவறு என்றும் கூறி உள்ளார் சானியா. இந்த பதிலடிக்கு பின் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Shoaib Malik, Sania Mirza and Pakistani cricketers smoking Sheesha
Story first published: Monday, June 17, 2019, 12:15 [IST]
Other articles published on Jun 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X