For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..

செஞ்சுரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.

Recommended Video

Ngidi bags six wickets as India bundled for 327 | IND vs SA 1st Test Day 3 | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், மாயங் அகர்வால் சிறப்பாக விளையாடினர்.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

மாயங் அகர்வால் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா முதல் பந்திலேயே டக் அவுட்டானார். லுங்கி கிடி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 35 ரன்கள் சேர்த்த போது தேவையில்லாத ஷாட் ஆடி அவுட்டானார்.

ராகுல் சதம்

ராகுல் சதம்

இதனைத் தொடர்ந்த கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் புது பந்தை தென்னாப்பிரிக்க அணி பயன்படுத்தியும் அது எந்த பயனும் அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய ராகுல் 7வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ரஹானே 40 ரன்களுடனும், ராகுல் 122 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இதனிடையே 2வது நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பந்த கூட வீசப்படாத நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் கூடுலாக 1 ரன் எடுத்து 123 ரன்களில் வெளியேற, நன்றாக விளையாடிய ரஹானேவும் மோசமான ஷாட் ஆடி 2 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார்.

ஏமாற்றிய ரிஷப் பண்ட்

ஏமாற்றிய ரிஷப் பண்ட்

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின் (4), ரிஷப் பண்ட் (8) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 272 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து 296 ரன்களுக்கு 7 விக்கெட் என்று தடுமாறி வருகிறது. இந்திய அணி ஒரு 350 ரன்களை தொட்டால் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தர முடியும்

Story first published: Tuesday, December 28, 2021, 16:03 [IST]
Other articles published on Dec 28, 2021
English summary
Ind vs SA 1st Day 3 Indian Lower order batsman fails to score இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X