For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நேரலையில் அவமானப்பட்ட கவாஸ்கர்..!! என்ன நடந்தது..?? IND vs SA 1st TEST

சென்சூரியன்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே டிரெண்டிங்கில் உள்ளது.

இந்தப் போட்டியில் நீங்கள் கவனிக்க தவறிய சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் தொகுத்து வழங்கவது தான் எங்களது பணி..

இன்றைய போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையின் போது கவாஸ்கர் ஒன்று கூற, அதற்க நேர் மாறாக நடந்தது. இதனால் அவருக்கு வெட்கம் தாங்கவில்லை.

Ind vs SA 1st Test Gavaskar Words in commentator box haunts India

272 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ரஹானே, கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. அப்போது பண்டு உடன் களத்திற்கு தமிழக வீரர் அஸ்வின் வந்தார். அப்போது சும்மா இல்லாத கவாஸ்கர், அஸ்வினின் பேட்டிங் குறித்து புகழ்ந்து தள்ளினார்.

அஸ்வின் 5 டெஸ்ட் சதம் அடித்து இருக்கிறார். அவர் சிறப்பாக ஆடுவார் என்று கூறிய மறு நொடியே அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் சற்று கவாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதுடன் அமைதியாக இல்லாமல் மீண்டும் ஷர்துல் தாக்கூருக்கு அவர் 3 அரைசதம் அடித்துள்ளார். அவர் பார்த்து கொள்வார் என்பது போல் கவாஸ்கர் புகழ்ந்தார்.

அஸ்வினை போல் அடுத்த நொடியே ஷர்துல் தாக்கூரும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வர்ணனையாளர்கள் கவாஸ்கரை ஓட்டினர். இப்படி வர்ணணையாளர் சொல்வதற்கு எதிர்மறையாக களத்தில் நடந்தால், அதற்கு ஆங்கிலத்தில் Commentator curse என்று சொல்வார்கள். அதாவது வர்ணனையாளர்களின் சாபம் என்று பொருள்.

“ஓ.. இதுதான் கர்மா ஒரு பூமராங்க் என்பதா”.. வாகனை வறுத்தெடுத்த வசீம் ஜாஃபர்.. 2 வருட பகைக்கு முடிவு “ஓ.. இதுதான் கர்மா ஒரு பூமராங்க் என்பதா”.. வாகனை வறுத்தெடுத்த வசீம் ஜாஃபர்.. 2 வருட பகைக்கு முடிவு

Story first published: Tuesday, December 28, 2021, 20:30 [IST]
Other articles published on Dec 28, 2021
English summary
Ind vs SA 1st Test Gavaskar Words in commentator box haunts India நேரலையில் அவமானப்பட்ட கவாஸ்கர்..!! என்ன நடந்தது..?? IND vs SA 1st TEST
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X