பந்துவீச்சில் முகமது ஷமி இரட்டை சதம்.... வெறுப்பை உமிழ்ந்தவர்களுக்கு பதிலடி..!! ஷமி உருக்கம்..!!

சென்சூரியன்: ஒருவரின் நாட்டுப் பற்றை யாராவது சந்தேகித்தாலோ, கேள்வி கேட்டாலோ அதை விட பெரிய தண்டனை வேறு எதும் இல்லை.

Shami,Bumrah,Shardul வெறித்தனம்! 197க்கு All Out ஆன South Africa | OneIndia Tamil

சாதாரண ஒருவருக்கே இப்படி என்றால் நாட்டுக்காக நிற்பவரின் நாட்டுப்பற்றை கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்

அப்படி ஒரு தண்டனையை தான் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்த ஆண்டு பெற்றார்.

இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமியின் பந்துவீச்சை , அந்த அணி வீரர்கள் பதம் பார்த்தனர். கிரிக்கெட்டில் இது போன்று நடைபெறுவது வழக்கம் தான். ஆனால் ஷமி இதனை வேண்டும் என்றே செய்தார் என்றும், ஷமி இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தானுக்காக விளையாடினார் என்ற விமர்சனங்களும் அவரை குறிவைத்து தாக்கப்பட்டன.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த விராட் கோலி மீதும் டுரோல்கள் வந்தன. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடருக்கு திரும்பிய ஷமி, சிறப்பாக பந்துவீசினார்.

200வது விக்கெட்

200வது விக்கெட்

தம் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக அவரது பந்துவீச்சு அமைந்தது. அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர்.இந்த இன்னிங்சில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 200வது விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றினார்.

பதிலடி

பதிலடி

இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். முகமது ஷமி, இந்திய அணிக்காக இது போன்று பல போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த வெற்றி தேடி தந்துள்ளார். இந்த நிலையில், தம் மீது மோசமான விமர்சனம் அளித்தவர்களுக்கு முகமது ஷமி தனது பந்துவீச்சு மூலம் பதிலடி தந்துள்ளார்.

ஷமி உருக்கம்

ஷமி உருக்கம்

200 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த முகமது ஷமி, தாம் ஒரு கிரிக்கெட் வீரராக சாதித்தற்கு என் தந்தையே காரணம் என்று தெரிவித்தார். ஷமிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கெயிப் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆண்டர்சன், பும்ரா, கம்மின்ஸ் போல் முகமது ஷமியும் கொண்டாடப்பட வேண்டியவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs SA 1st Test Mohammed Shami Acheives 200 Wickets Mile stone பந்துவீச்சில் முகமது ஷமி இரட்டை சதம்.... வெறுப்பை உமிழ்ந்தவர்களுக்கு பதிலடி..!! ஷமி உருக்கம்..!!
Story first published: Tuesday, December 28, 2021, 23:41 [IST]
Other articles published on Dec 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X