For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்போது தான் திருந்துவார் கோலி..!! தொடரும் தவறான முடிவுகளால் சறுக்கும் இந்தியா..!!

சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றது இல்லை.

இம்முறை தென்னாப்பிரிக்காவில் நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாததால், இந்திய அணிக்கு தொடரை வெல்ல இது சரியான வாய்ப்பு

ஆனால் அதற்கான சரியான யுத்திகளை இந்தியா கையாளவில்லை என்றால் இந்த வாய்ப்பு கானல் நீராகி விடும்

இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..

யார் சிறந்த கேப்டன்?

யார் சிறந்த கேப்டன்?

ஒரு சிறந்த கேப்டன் என்றால் சூழலுக்கு ஏற்ப சரியான 11 வீரரை தேர்வு செய்து களத்தில் களமிறக்க வேண்டும். ஆனால் கேப்டனாக விராட் கோலி இந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறார். தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் தான் என்ற பழமொழிக்கு ஏற்ப, தொடர்ந்து 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விராட் கோலி களமிறங்குகிறார்.

தவறான முடிவு

தவறான முடிவு

சென்ஞ்ரியன் டெஸ்ட் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்புவார்கள். இல்லை திடீரென்று சறுக்கல் ஏற்படும் என்று எதிர்பார்த்தது தான். இந்த சூழலில் வெறும் 5 பேட்ஸ்மேன்கள், 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், 1 சுழற்பந்துவீச்சாளர், 4 வேகப்பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்துள்ளார் விராட் கோலி

மறுக்கப்படும் வாய்ப்பு

மறுக்கப்படும் வாய்ப்பு

இதே தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய ஏ தொடரில் சதம் விளாசிய விஹாரி இருக்கும் போது அவரை தொடர்ந்து அணியில் சேர்க்காமல் உள்ளார் விராட் கோலி. அவரை மட்டும் அணியில் சேர்த்திருந்தால், அவர் ஒரு அளவு தாக்குப்பிடித்து 50 ரன்கள் அடித்திருப்பார். இந்தியாவின் இலக்கும் 400-ஐ கடந்திருக்கும்.

Recommended Video

Rohit Sharma's injury status unclear, KL Rahul to lead in ODIs vs South Africa ? | Oneindia Tamil
திருந்துவாரா கோலி?

திருந்துவாரா கோலி?

ஆனால் விராட் கோலி ஏன் தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு தர மறுக்கிறார் என்று தெரியவில்லை. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கூடுதல் பேட்ஸ்மேன்களை தான் வைத்து விளையாட வேண்டுமே தவிர கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட கூடாது. இந்த டெஸ்டில் தொடக்க வீரர்கள் சொதப்பி இருந்தால், இந்தியாவின் ஸ்கோர் 200ஐ கூட தொட்டு இருக்காது. இதனால் இந்த தவறை விராட் கோலி திருத்தி கொள்வார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

Story first published: Tuesday, December 28, 2021, 19:18 [IST]
Other articles published on Dec 28, 2021
English summary
Ind vs SA 1st Test Virat Kohli mistake in team combination எப்போது தான் திருந்துவார் கோலி..!! தொடரும் தவறான முடிவுகளால் சறுக்கும் இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X