For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜோகனஸ்பர்க் டெஸ்ட் – பிட்ச் தன்மை மாறியதால் தப்பித்த சீனியர்கள்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்தது.

“3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ! “3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அதிரடியாக விளையாடிய மாயங் அகர்வாலும் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இதனையடுத்து ஃபார்மில் இல்லாத புஜாராவும், ரஹானேவும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை தொடங்கினர். வந்த வேகத்தில் இருவரும் ஆட்டமிழப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்

100 ரன்கள் ஜோடி

100 ரன்கள் ஜோடி

குறிப்பாக புஜாரா 62 பந்துகளில் அரைசதம் விளாசினார், இது புஜாராவின் 3வது அதிவேக அரைசதமாகும். மறுமுனையில் ரஹானேவும் அரைசதம் கடக்க, 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ரஹானே 58 ரன்கள் சேர்த்து இருந்த போது ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது

ஆடுகளம் மாறியது

ஆடுகளம் மாறியது

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்த ஆடுகளம், தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளது,. ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம், குறைந்தது. மேலும் வெயில் காரணமாக ஆடுகத்தின் தன்மையும் மாறியது. இதன் காரணமாக ரஹானே, புஜாரா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஜோகனஸ்பர்கில் மழை பெய்யாத வரை ஆடுகளம் கடைசி 2 நாட்களும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும், அதே சமயம் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களும் மிரட்ட முடியும்முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்த ஆடுகளம், தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளது,. ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம், குறைந்தது. மேலும் வெயில் காரணமாக ஆடுகளம் தன்மையும் மாறியது. இதன் காரணமாக ரஹானே, புஜாரா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஜோகனஸ்பர்கில் மழை பெய்யாத வரை ஆடுகளம் கடைசி 2 நாட்களும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும், அதே சமயம் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களும் மிரட்ட முடியும்

Recommended Video

India set 240 Runs Target for win! Can Proteas defy history in Wanderers? | OneIndia Tamil
பெரிய இலக்கு

பெரிய இலக்கு

இதனால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இலக்கு 200 ரன்களாக இருந்தால் தென்னாப்பிரிக்க அணி போட்டியை வென்றுவிடும். இந்த டெஸ்டில் விராட் கோலி இருந்திருந்தால்,பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் அவர் இரட்டை சதமே விளாசி இருப்பார். தற்போது இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால் ஜோகனஸ்பர்க் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Wednesday, January 5, 2022, 16:53 [IST]
Other articles published on Jan 5, 2022
English summary
Ind vs SA 2nd Test- Pitch condition favours Pujara and rahane to score runsஜோகனஸ்பர்க் டெஸ்ட் – பிட்ச் தன்மை மாறியதால் தப்பித்த சீனியர்கள்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X