For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படி செய்யாதீங்க.,!! இந்திய வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார் வைத்த கோரிக்கை..!!

ஜோகனஸ்பர்க்: ஏபி டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, டுபிளஸி ஆகியோர் இல்லாத தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை எப்படி வீழ்த்த போகிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

ஆனால், அந்த சந்தேகத்தை சுக்கு நூறாக உடைத்து பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியுள்ளது புத்தம் புதிய தென்னாப்பிரிக்க அணி

பலம்வாய்ந்த இந்தியாவை தோற்கடித்த முழு பெருமை, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய பாறையாக விளங்கும் கேப்டன் டீன் எல்காரை தான் சேரும்

“அந்த 2 முக்கிய சூழ்நிலைகள்”... விராட் கோலியின் கேப்டன்சிய மிஸ் செய்த இந்திய அணி.. வித்தியாசம் என்ன?“அந்த 2 முக்கிய சூழ்நிலைகள்”... விராட் கோலியின் கேப்டன்சிய மிஸ் செய்த இந்திய அணி.. வித்தியாசம் என்ன?

பாறை எல்கார்

பாறை எல்கார்

முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சிலே டீன் எல்கார் தாம் யார் என்று நிரூபித்துள்ளார். தற்போது இந்தியா 2வது டெஸ்டில் தோற்க முக்கிய காரணம் டீன் எல்கார் தான். முதல் இன்னிங்சில் சுமார் 3 மணி நேரம் களத்தில் தாக்குப் பிடித்து 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 2வது இன்னிங்சில் 5 மணி நேரத்திற்கு மேல் களத்தில் பாறையில் போல் நின்று தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

டீன் எல்கார் தாக்கு

டீன் எல்கார் தாக்கு

டீன் எல்காரை ஆட்டமிழக்க வைக்க, இந்திய வீரர்கள் ஷாட் பாலை அதிகமாக பயன்படுத்தினர். ஆனால் அதனை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை. பாறை போல் நின்று பந்தை உடம்பில் வாங்கி கொண்டார். இந்த வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார், என்னை அவுட்டாக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் ஷாட் பந்தை வீசியது போல் தெரியவில்லை

நிறுத்தி கொள்ளுங்கள்

நிறுத்தி கொள்ளுங்கள்

இதனால், இனி என்னை பந்தால் தாக்குவதை இந்திய வீரர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார். பந்தை உடலால் தடுப்பதை முட்டாள்தனம் என்று சிலர் கூறுவார்கள், நான் இதனை வீரமாக தான் பார்க்கிறேன். என்னை தாண்டி தான் ஜெயிக்க வேண்டும் என்று உடல், பொருள் ஆவியை வைத்து நான் விளையாடினேன் என்றால் அணியில் உள்ள மற்ற வீரர்களும் அதை செய்ய வேண்டும்.

Recommended Video

IND vs SA India தோல்விக்கு இதுவே காரணம் –KL Rahul வருத்தம் | Oneindia Tamil
எல்கார் யுத்தி

எல்கார் யுத்தி

மூன்றாம் நாள் முடிவில் எனக்குள் நானே கூறி கொண்டேன். என்ன நடந்தாலும் விக்கெட்டை இழக்க கூடாது என்று. இதனால் இந்திய வீரர்கள் சிராஜ், ஷர்துல் தாக்கூர் என்னை திட்டிய போது நானும் அமைதியாக இல்லாமல் பதிலுக்கு பேசினேன் என்று கூறினார். இதன் மூலம் எனக்கு ஷாட் பால் வீசினால் பிரச்சினையே இல்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் டீன் எல்கார்.

Story first published: Friday, January 7, 2022, 16:39 [IST]
Other articles published on Jan 7, 2022
English summary
Ind vs SA 2nd Test- SA Captain Dean Elgar interview about Win against Indiaஅப்படி செய்யாதீங்க.,!! இந்திய வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார் வைத்த கோரிக்கை..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X