ச்சே..!! கடைசியில் வந்து கோட்டைவிட்டாச்சு..!! தீபக் சாஹரின் மரண அடி வீண்.. இந்தியா போராடி தோல்வி..

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது

Deepak Chahar Heorics to De Kock's Innings! IND vs SA 3rd ODI Highlights | OneIndia Tamil

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை ஓயிட்வாஷ் செய்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபில்டிங் செய்வதாக அறிவித்தது. சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்பட்டனர்

டி காக் சதம்

டி காக் சதம்

தொடக்க வீரர் மாலன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் பெவுமா 8 ரன்களில் ரன் அவுட்டானார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி காக்.வெண்டர்டுசன் ஆகியோர் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது. டி காக் 124 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியை காட்டிய வெண்டர்டுசன் 52 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

288 ரன்கள் இலக்கு

288 ரன்கள் இலக்கு

இதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 39 ரன்கள் சேர்க்க, இறுதியில் டுவைன் பிரிட்டோரியஸ் 20 ரன்கள் எடுத்தார்., கடைசி ஓவரில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதனால் தென்னாப்பிரிக்க அணி 49.5வது ஓவரில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, தீபக் சாஹர், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்தடுத்து அரைசதம்

அடுத்தடுத்து அரைசதம்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான், விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். தவான் 61 ரன்களிலும், கோலி 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி வெளியேறினார்

ஏமாற்றிய ஸ்ரேயாஸ்

ஏமாற்றிய ஸ்ரேயாஸ்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார் என கருதப்பட்ட சூரியகுமார் யாதவ் 39 ரன்களில் வெளியேறினார். 223 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் களத்துக்கு வந்த தீபக் சாஹர் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

தீபக் சாஹர் ஆட்டம்

தீபக் சாஹர் ஆட்டம்

தீபக் சாஹர் 5 பவுண்டரிகள், 2 சிக்சர் என 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு பும்ரா துனை நிற்க இந்திய அணி வெற்றி அருகில் வந்தது. ஆனார் தீபக் சாஹர் 54 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் உடைந்தது. பும்ரா 12 ரன்கள் மட்டும் அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், இந்திய அணியின் கடைசி விக்கெட் அப்போது விழுந்ததால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை முழுமையாக இழந்தது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது டி காக்கிற்கு வழங்கப்பட்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs SA 3rd odi Deepak chahar innings went in vain as SA White washes India ச்சே..!! கடைசியில் வந்து கோட்டைவிட்டாச்சு..!! தீபக் சாஹரின் மரண அடி வீண்.. இந்தியா போராடி தோல்வி..
Story first published: Sunday, January 23, 2022, 22:57 [IST]
Other articles published on Jan 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X